தமிழகத்தின் புதிய தலைமை தகவல் ஆணையராக ஆர். ராஜகோபால் தேர்வு

2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றினார். பிறகு 2017ம் ஆண்டு ஆளுநரின் கூடுதல் செயலாளராக பொறுப்பு வகித்தார்.

By: November 19, 2019, 8:11:17 AM

TN New CIC R Rajagopal : தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமை தகவல் ஆணையராக தேர்வு செய்யப்பட்டார் ஆர். ராஜகோபால். இவர் இதற்கு முன்பு ஆளுநரின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்தார். அடுத்து வரும் மூன்று வருடங்களுக்கு இவர் இந்த பதவியை வகிப்பார். தமிழகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தினை மேம்படுத்த தன்னால் இயன்ற ஒத்துழைப்பை நல்குவார்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழு நேற்று ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எட்டப்பட்டது. இந்த ஆலோசனைக் குழுவில் எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலினும் இடம் பெற்றிருந்தார். ஆனால் இந்த தேர்வுக்குழு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்றும், யார் யார் இந்த பதவிக்காக விண்ணப்பித்திருக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் தனக்கு அளிக்கப்படாததாலும் இந்த கூட்டத்தை அவர் புறக்கணித்தார்.

TN New CIC R Rajagopal, Chief information commission

அமைச்சர் ஜெயக்குமார் பிறகு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து ஆர். ராஜகோபால் குறித்தும் அவர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்தும் விளக்கம் அளித்தார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் புதிய தகவல் தலைமை ஆணையர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். ராஜகோபாலுக்கு முன்பு ஷீலா ப்ரியா இந்த பொறுப்பினை வகித்து வந்தார். அவருக்கு 65 வயது நிறைவடைந்ததை தொடர்ந்து புதிய ஆணையர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1984 பேட்சினை சேர்ந்தவர் இவர். 2014-ம் ஆண்டுக்கு முன்பு வரை மத்திய அரசின் பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றினார். பிறகு 2017ம் ஆண்டு ஆளுநரின் கூடுதல் செயலாளராக பொறுப்பு வகித்தார். 65 வயதினை எட்டும் வரையில் இந்த பொறுப்பினை வகிப்பார் ராஜகோபால்.

மேலும் படிக்க :தமிழக உள்ளாட்சி தேர்தல் தேதியை டிச. 13-க்குள் அறிவிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் கெடு

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Tn new cic r rajagopal appointed as the chief information commissioner for tamil nadu

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X