/indian-express-tamil/media/media_files/2025/10/23/rain-in-tn-2025-10-23-17-33-10.jpg)
சென்னை குடிநீர் ஏரிகளில் 76.97% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 76.97% நீர் இருப்பு உள்ளது. 5முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 9.050 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 2,900 கன அடியில் இருந்து 4,120 கன அடியாக அதிகரித்துள்ளது. கொசஸ்தலை ஆற்றுக்கு 4,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
15 அணைகள், 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின
தொடர் மழையால் தமிழ்நாடு முழுவதும் 15 அணைகள், 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் தென் பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் வீடூர் அணையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி, 9 மதகுகளின் வழியாக 4,410 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு 3,196 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- Oct 23, 2025 17:33 IST
20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, நீலகிரி, திருவள்ளூர், திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Oct 23, 2025 16:13 IST
பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆலோசனை
பருவமழையை ஒட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த ஆலோசனை கூட்டத்தில், நெல் கொள்முதல் குறித்து அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எடுத்துரைத்தார். மழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீரில் மூழ்கிய பயிர்களில் 33%, அதற்கு மேல் சேதம் ஏற்படும் பட்சத்தில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
- Oct 23, 2025 15:38 IST
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 43,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் 32,000 கன அடியாக இருந்த தண்ணீர் வரத்து 43,000 கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும் ஆற்றில் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
- Oct 23, 2025 15:36 IST
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு - அரசாணை
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்குதல் தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது.
- Oct 23, 2025 15:05 IST
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக பாலம்
பட்டாம்பாக்கம் அருகே மருதாடு பகுதியில் பாலம் சேதமானதால் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது; தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் பழுதான பாலத்தில் ஆபத்தான முறையில் பயணிக்கும் மக்கள் ரூ.50 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க திட்டத்தின்கீழ் புதிய பாலம் கட்டப்படும்; உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என கடலூர் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளார்.
- Oct 23, 2025 14:37 IST
பருவமழை தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
பருவமழை தொடர்பாக சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
- Oct 23, 2025 14:35 IST
நிரம்பிய கே.ஆர்.எஸ் அணை; காவிரி ஆற்றில் 40,000 கனஅடி நீர் திறக்க உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகாவில் கிருஷ்ணராஜ சாகர் அணை முழுக் கொள்ளவு 124.80 அடியை எட்டியது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் 25,000 முடல் 40,000 கனஅடி நீர் வரை திறக்கவுள்ளடால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- Oct 23, 2025 14:29 IST
ராணிப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேல் பரவலாக மழை
ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்டத்துக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
- Oct 23, 2025 14:01 IST
தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் இன்று (அக்டோபர் 23, 2025) 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய மழை நிலவரப்படி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
- Oct 23, 2025 13:57 IST
நிரம்பிய வைகை அணை: அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரின் அளவு 2073 கன அடியாக குறைப்பு
வைகை அணை நிரம்பி உள்ள நிலையில், அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 3073 கன அடியிலிருந்து, வினாடிக்கு 2073 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- Oct 23, 2025 13:08 IST
வங்கக் கடலில் நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் நாளை (24.10.2025) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்து வர்ம் 24 மணி நேரத்தில் ஆழ்ந்தாற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Oct 23, 2025 13:04 IST
கள்ளக்குறிச்சி மணிமுக்தா அணையில் ஷட்டர் பழுதுபார்க்கும் பணி; உபரிநீர் ஆற்று வாய்க்கால்களில் திறப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் மணிமுக்தா அணையில் ஷட்டர் பழுதுபார்க்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து வரும் உபரி நீர் முழுவதுமாக ஆற்று வாய்க்கால்கள் வழியாக திறந்துவிடப்படுகின்றன.
- Oct 23, 2025 12:37 IST
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியைத் தாண்டியது. தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வினாடிக்கு 750 கன அடி திறக்கப்பட்டு வருகிறது.
- Oct 23, 2025 12:24 IST
திருவாரூர் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் மழைநீர்; நெல் மூட்டைகள் முளைத்ததால் விவசாயிகள் கவலை
ருவாரூர் மாவட்டம் செருமங்கலத்தில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் தேங்கிய 5,000 நெல் மூட்டைகள் மழை காரணமாக முளைக்க தொடங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- Oct 23, 2025 11:59 IST
கிடங்கல் ஏரியிலிருந்து செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு - மக்கள் அவதி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் கிடங்கல் ஏரியிலிருந்து செல்லும் வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளநீரால் தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பல கிலோ மீட்டர் தூரம் மக்கள் சுற்றுலு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
- Oct 23, 2025 11:10 IST
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு - 750 கன அடியாக உயர்வு
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கும் உபரி நீரின் அளவு இன்று காலை 10 மணி நிலவரப்படி 750 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
- Oct 23, 2025 10:30 IST
பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - மலைகிராமங்களில் பாதை துண்டிப்பு
பர்கூர் மலைப்பகுதியில் பெய்த தொடர் மலையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வேலம்பட்டி, குட்டையூர் போன்ற மலைகிராமங்களுக்கு செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது.
- Oct 23, 2025 09:54 IST
வெள்ள நிவாரணப் பணி-பழனிசாமிக்கு தகுதியில்லை - சேகர்பாபு
வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து பேசுவதற்கு பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை. கொரோனா காலத்தில் தரையில் கால் கூட படாமல் பணியாற்றியவர் பழனிசாமி.
அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
- Oct 23, 2025 09:47 IST
தண்ணீரில் மூழ்கிய மலட்டாறு தரைப்பாலம்- ஆபத்தை உணராமல் வெள்ளி நீரில் நடந்து செல்லும் பொதுமக்கள்
விழுப்புரம் அருகில் உள்ள பரசுரட்டிபாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இருக்கும் மலட்டாறு தரைப்பாலம், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்த அபாயகரமான வெள்ள நீரின் தீவிரத்தை உணராமல், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அந்தப் பாலத்தின் மீது நடந்து செல்கின்றனர்.
- Oct 23, 2025 09:19 IST
தீர்த்த மலையில் 17 செமீ மழைப்பதிவு
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்த மலையில் நேற்றிரவு மெய்த மழையில், 2 மணி நேரத்தில் 17 செமீ மழை பதிவானது.
- Oct 23, 2025 09:16 IST
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்தது!
வட உள் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்தது!
- இந்திய வானிலை ஆய்வு மையம்
- Oct 23, 2025 09:03 IST
தமிழக அணைகளில் 87% நீர் இருப்பு; 1,522 ஏரிகள் 100% நிரம்பின
நீர்வளத் துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். தற்போது, இந்த அணைகளில் 196.897 டி.எம்.சி. நீர் சேமிக்கப்பட்டுள்ளது. இது மொத்தக் கொள்ளளவில் 87.77 சதவீதம் ஆகும். இதனால் மாநிலம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி விநியோகிக்கப்பட்டு வருகிறது.
- Oct 23, 2025 08:44 IST
பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் காணப்படும் வெண்நுரை
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் தற்போது வெள்ளை நிறத்தில் நுரை அதிகமாகக் காணப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையின்போது செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படும் சமயத்தில், ஏரியில் உள்ள கழிவுகளும் அடையாறு ஆற்றின் வழியாக கடலில் கலப்பதால் இந்த வெண்மையான நுரை ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.
Video: Sun News
#Watch | பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் காணப்படும் வெண்நுரை
— Sun News (@sunnewstamil) October 23, 2025
பருவமழை காலங்களில் செம்பரபாக்கம் ஏரி திறக்கும்போதெல்லாம் அதன் வழியில் உள்ள கழிவுகளும் கடலில் கலந்து, வெண்மை நிறத்தில் நுரை வெளியேறுவதாக கூறப்படுகிறது.
ஆலைக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அடையாறு ஆற்றின் வழியாக மழைக்… pic.twitter.com/NJIsMddpOR - Oct 23, 2025 08:41 IST
சென்னையில் லேசான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் விட்டுவிட்டு மழை பெய்யும். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வானிலை ஆய்வு மையம்
- Oct 23, 2025 08:18 IST
மழைநீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
சென்னை: மாங்காட்டில் வீட்டின் அருகே தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி இரண்டரை வயது குழந்தை பிரனிகா உயிரிழந்தாள். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை பிரனிகா திடீரென மாயமாகி நீரில் மூழ்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். குழந்தை உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Oct 23, 2025 08:12 IST
கனமழை பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் ஆட்சியர் அலுவலகம், 1077, 0416-2258016 என்ற எண்ணில் பொதுமக்கள் புகாரளிக்கலாம்; அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம் 0416 - 2276443, காட்பாடி வட்டாட்சியர் அலுவலகம் 0416-2297647; வீடுகள் சேதம், கால்நடைகள் சேதம் மற்றும் மனித உயிர்ச்சேதம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
- Oct 23, 2025 08:08 IST
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று 32,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
- Oct 23, 2025 07:38 IST
7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- Oct 23, 2025 07:38 IST
திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழைப்பதிவு
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.
திருவாலங்காடு 7 செ.மீ, கும்மிடிப்பூண்டி 6 செ.மீ, பூண்டி 5 செ.மீ, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர் தலா 4 செ.மீ, ஜமீன் கொரட்டூர், தாமரைப்பாக்கம், ஆவடி, ஊத்துக்கோட்டை, சோழவரம் தலா 3 செ.மீ மழை பதிவானது.
- Oct 23, 2025 07:37 IST
தருமபுரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. தொடர் மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.