என்ஐஏ விசாரணை வளையத்தில் சிறப்பு எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு
Wsilson murder case to NIA : களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ., கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், இந்த வழக்கை, தேசிய விசாரணை முகமை ( NIA) விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ., கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில், இந்த வழக்கை, தேசிய விசாரணை முகமை ( NIA) விசாரணை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தவுபிக் மற்றும் சமீம் உள்ளிட்ட கைது செய்யப்பட்டனர். தற்போது இக்கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .
இது குறித்து போலீசார் கூறியதாவது: வில்சன் கொலை வழக்கில் பண பரிவர்த்தனைக்கு உதவியதாக, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டனத்தை சேர்ந்த பிச்சைக்கனி , அமீர், முகம்மது அலி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஷேக் தாவூத் என்பவர் தப்பியோடி விட்டார். ஷேக் தாவூத் ஐ.எஸ் அமைப்பிற்கு உதவியதாக என் .ஐ., ஏ வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், வில்சன் கொலை வழக்கு, என்ஐஏ அமைப்பு விசாரணை நடத்த உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.