TNPSC Group 2 Prelims 2018 Result: டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு தமிழ்நாட்டில் தனி மவுசு உண்டு. சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள்கூட வெளிமாநிலங்களில் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் டி.என்.பி.எஸ்.சி. முழுக்க தமிழ்நாடு அரசுப் பணி ஆகும். எனவே சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள்கூட, அதை உதறிவிட்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 எழுதி தேர்ச்சி பெற விரும்புவது உண்டு. அதற்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெறுவது டி.என்.பி.எஸ்.சி குரூப் 2.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுகள் கடந்த நவம்பர் மாதம் 11ம் தேதி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சார்பதிவாளர், வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. 1199 காலி பணியிடங்களுக்கு 6,26,726 நபர்கள் தேர்வு எழுதினர்.
TNPSC Group 2 Prelims 2018 result announced at tnpsc.gov.in
வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான விடைகள் நவம்பர் 14ம் தேதி வெளியானது. கேட்கப்பட்ட கேள்விகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதனை அறிவிக்கும் பொருட்டு மின்னஞ்சல் முகவரியை வழங்கியிருந்தது. டி.என்.பி.எஸ்.சி.
மேலும் படிக்க : தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள்
இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் நேற்று டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடந்து முடிந்து ஒரு 40 நாட்கள் கூட முழுதாக முடிவடைவதற்குள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இப்படி தேர்வு முடிவுகள் வெளியானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 2 Prelims 2018 Result பார்ப்பது எப்படி ?
- தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றீர்களா என்பதை அறிந்து கொள்ள www.tnpsc.gov.in இணையத்திற்கு செல்லவும்.
- டி.என்.பி.எஸ்.சி அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும்
- வாட்ஸ் நியூ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை க்ளிக் செய்யவும்.
- க்ளிக் செய்தவுடன் ‘Group-II Services (DOE: 11.11.2018 FN)- Preliminary Results’ என்று திரையில் தோன்றும்.
- அதை க்ளிக் செய்தால், தேர்ச்சி பெற்றவர்களின் முழு விபரங்கள் அடங்கிய பக்கம் ஒன்று ஓப்பன் ஆகும்.
- உங்களின் தேர்வு எண் அடங்கியிருக்கும் பக்கத்தினை மேற்படி தேவைகளுக்கு ப்ரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.
மேலும் படிக்க : டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 2 மெயின் தேர்வுகள் எப்போது ?
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்கள் இந்தத் தகவல்களை பயன்படுத்திக் கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி மெயின் தேர்வுகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.