/tamil-ie/media/media_files/uploads/2018/07/TNPSC-Group-4-Result-2018.jpg)
TNPSC Group 4 Result 2018: டிஎன்பிஎஸ்சி குரூப் 4
TNPSC Group 4 Result 2018: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன்.
TNPSC Group 4 Result 2018: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பு:
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பில், வேலை வாய்ப்புக்கான கலந்தாய்வு அக்டோபர் மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது பேசிய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடைபெற்ற தேர்வின் முடிவுகள் நேற்று வெளியானது என்றும், www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன என்றும் கூறினார்.
மேலும், “பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை, 17 லட்சம் பேர் எழுதினர். இதில் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் தற்போது உள்ளது. இதில் 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம். தேர்வானவர்களுக்கு தகவல் அனுப்பப்படும். அவர்கள் தங்களின் சான்றிதழ்களை இணையத்தத்தில் இ- சேவை மையத்தின் மூலம் பதிவு செய்தால் சென்னை வருவதை தவிர்க்கலாம்.
சான்றிதழ் பதிவேற்றங்கள் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கி, 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அதன் பிறகு சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணி தொடங்கும், பின்னர் அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.