Advertisment

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு : சிக்கிய 14 பேர், தொடரும் கைது படலம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tnpsc,tnpsc scam,

Tnpsc,tnpsc scam, tnpsc group 2A Exam scam, magic pen

கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டது. இந்த தரவரிசை பட்டியலில்  ராமேஸ்வரம், கீழக்கரை  தேர்வுமையங்களில் தேர்வு எழுதிய மாணவர்கள் 39 பேர் முதல் 100 இடங்களுக்குள் வந்தனர். முதற்கட்ட விசாரணையை நடத்திய தேர்வாணையம் இரண்டு தேர்வு மையங்களிலும் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்த, டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடை விதித்தது. அதன் தொடர்ச்சியாக, வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு  விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முறைகேடுகளில் மூன்று அரசு ஊழியர்கள் உட்பட 14 நபர்களை சிபிசிஐடி கைது செய்துள்ளது.

Advertisment

   முறைகேடுகளில் கைதானவர்கள் குறித்த விவரம் :

மூன்று அரசு ஊழியர்கள்:    

டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் இதுவரை மூன்று அரசு ஊழியர்களை கைது செய்துள்ளனர். கைதானவர்கள் மூன்று பேரும் தற்போது  புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

  • ஓம்காந்தன் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) ரெக்கார்டு கிளார்க்;
  • ரமேஷ் - பள்ளிக் கல்வித் துறை அலுவலக உதவியாளர்;
  • திருக்குமரன் - எரிசக்தித் துறை அலுவலக உதவியாளர்;

இந்த மூன்று பேரையும் பாலசுந்தர்ராஜ் தமிழக அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

இளம் விஞ்ஞானி திட்டம் : வருங்கால அப்துல் கலாம்களை அழைக்கும் இஸ்ரோ

இடைத்தரகா்கள் :

ஜெயக்குமார் :   ஒட்டுமொத்த முறைகேடுகளுக்கும் ஒருங்கினைப்பாளராக செயல்பட்டுள்ளார் என்று தெரிய வந்திருக்கிறது. 99 தேர்வர்களிடமும் இவர் பணம் வாங்கியுள்ளார். இவர் மூலம், ரூ. 10 கோடி வரை இவர் மூலம் பரிமாரியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஜெயக்குமார் தற்போது வரை தலைமறைவாக இருக்கின்றார். இவரை கைது செய்தால் இந்த முறைகேடுகளில் அனைத்து மட்டங்களிலும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களின் முழுவிவரம் தெரியவரும் என்று சிபிசிஐடி நம்புகிறது.

பாலசுந்தர்ராஜ் : இந்த முறைகேடுகளில் முக்கிய இடைத்தரகராக செயல்பட்டவர் பாலசுந்தர்ராஜ். தேனி மாவட்டத்தின் சீலயம்பட்டியை  சேர்ந்த இவரை சில நாட்களுக்கு முன்பு சிபிசிஐடி கைது செய்தது. தேர்வாணையத்தில் பணிபுரியும் மூத்த  அதிகாரிகளுக்கும் இந்த தேர்வாணையத்தில் தொடர்புள்ளதா ? என்ற கோணத்தில் இவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

2017ம் ஆண்டு நடந்த குரூப் 2 தேர்விலும் முறைகேடா?

டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்:   

வேல்முருகன் - ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்;

ராஜசேகர் - கடலூர் மாவட்டத்தைச்  சேர்ந்தவர்;

காலேஷா - சென்னை ஆவடியைச் சேர்ந்தவர்;

எம். கார்த்தி - ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்  ;

எம் வினோத் குமார் - சென்னை ஆவடியை சேர்ந்தவர் ;

கே.சீனிவாசன் - கடலூர் மாவட்டத்தைச்  சேர்ந்தவர்;

சில தேர்வர்கள் முறைகேடுகளுக்கு பணம் கொடுத்ததோடு நின்றுவிடாமல், சின்ன இடைத்தரகராகவும் செயல்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், உளுந்தூா்பேட்டை சேர்ந்த விக்னேஷ், கடலூா் மாவட்டத்தை சேர்ந்த சிவராஜ் என்ற இரண்டு தேர்வர்களையும் தற்போது சிபிசிஐடி கைது செய்திருக்கிறது. சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில்  நடைபெற்ற விசாரணைக்கு பின்பு இவர்கள் கைது செய்யப்பட்டிருகின்றனர்.

மற்ற நிலவரங்கள்: காவல்துறையினரின் விசாரணையில் இருந்த பார்த்தசாரதி, வீரராஜ் என்ற இரண்டு தாசில்தார்களும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தேர்வு மையங்களில் தேர்வு அதிகாரிகளாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராமநாதபுரம், கீழக்கரையில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக இருந்தவர்ளுக்கு முறைகேட்டில் தொடர்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment