Advertisment

குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு இல்லை: ஜெயக்குமார், மு க ஸ்டாலின் சொல்வது என்ன?

சிபிசிஐடி விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது, 'குரூப் -4 தேர்வை ரத்து செய்ய தேவையில்லை' என்ற அமைச்சரின் வாதம் ஏற்புடையதா? ஸ்டாலின் கேள்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குரூப்-4 தேர்வு ரத்தாக வாய்ப்பு இல்லை: ஜெயக்குமார், மு க ஸ்டாலின் சொல்வது என்ன?

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக மூன்று அரசு ஊழியர்களை உட்பட  16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக சிபிசிஐடி காவல் பிரிவி தொடர்ந்து ஏழாவது நாளாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மறுதேர்வு நடத்தப்படுமா? என்ற கேள்வியும் மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Advertisment

பணியாளர் சீர்திர்ருத்தத்துறை அமைசச்சர் ஜெயக்குமார்:  

இந்த முறைகேடு தொடர்பாக, பணியாளர் சீர்திர்ருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்," முழு விசாரணை முடியும் முன்பே, ஒரு தேர்வு மையங்களில் நடைபெற்ற முறைகேடுகளை வைத்து முழு தேர்வையும் ரத்து செய்ய முடியாது. தேர்வை ரத்து செய்தால் தேர்ச்சியுற்ற அனைத்து தேர்வர்களும் பாதிக்கபடுவார்கள்" என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் பல  அரசு தேர்வுகளை நியாயமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தியிருக்கின்றனர். ஒட்டுமொத்த தேர்வாணையத்தையும் நாம் குற்றம் சாடிவிட முடியாது. இந்த குற்ற செயல்களில்  ஈடுபட்ட  அனைவர்களும் களையெடுக்கப்படுவார்கள் என்றும் தெரவித்தார்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு : சிக்கிய 14 பேர், தொடரும் கைது படலம்

திமுக தலைவர் ஸ்டாலின்:  

டிஎன்பிஎஸ்சி தேர்வ முறைகேடுகளில் இதுநாள் வரையில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 99 தேர்வர்கள் நிரந்தரமாக தகுதி நீக்கம் செய்யட்டுள்ளார்கள். மத்திய பிரேதேச 'வியாபம்' ஊழலை விட ஒரு மோசமான ஊழல் வழக்கு நடந்தேறியுள்ளது.

ஆனால், இந்த 'மெகா தேர்வு ஊழலுக்கு'   அரசு தேர்வாணையத்தில் பணிபுரியும் ஒரு ரிக்கார்ட் கிளார்க்த்தான் காரணம் என்று திசை திருப்பது உள்நோக்கம் நிறைந்ததாகவே கருதப்படுகிறது. ஒரு ரிக்கார்ட் கிளார்க்கால் அனைத்து முறைகேடுகளையும் செய்துவிட முடியும் என்றால், தேர்வாணையத்திற்கு இரு தலைவர், உறுப்பினர்கள், செயலாளர், தேர்வுக் காட்டுப்பாடு அதிகாரி எல்லாம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முறைகேடு, எவ்வாறு நடைபெற்றது?

சிபிசிஐடி தேர்வில் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடைபெறுகின்ற நேரத்தில் - அதுவும் முறைகேடுகள் குறித்து செய்தி வெளிவந்து 25 நாட்களுக்குப் பிறகு பணியாளர் சீர்திருத்தத்துறை அமைச்சர் திரு.ஜெயக்குமார் இன்றைய தினம் திடீரென்று ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். இத்தனை நாள் அமைச்சர் எங்கே போயிருந்தார்? யாருக்காக "சூப்பர் ஸ்போக்ஸ் மேனாக" ப் பணியாற்றி - இந்த முறைகேடுகளை கண்டுக் கொள்ளாமல் அமைதி காத்தார்? இப்போது ஏன் தேர்வாணைய அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்?

சிபிசிஐடி விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் போது, "குரூப் -4 தேர்வை ரத்து செய்ய தேவையில்லை" என்ற அமைச்சரின் வாதம் ஏற்புடையதா? என்ற கேள்வியையும் எழுப்பினார். ஏற்கனவே, காவல்துறை உதவி ஆய்வாளர் தனது குடும்பத்தில் உள்ளவர்களை எல்லாம் தேர்வில் வெற்றி பெற வைத்துள்ளார் என்றும், அவர் அதிமுக அமைச்சருக்கு வேண்டியவர் என்பதால் போலிசார் நெருங்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

எனவே, இந்த முறைகேடின் ஆணி வேர் எங்கு இருக்கிறது என்பதை தீர விசாரிக்க வேண்டும். குரூப்- 4 தேர்வு முறைகேடுகள் குறித்து உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நியாயமாக நடைபெற துறை அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Tnpsc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment