Today Chennai weather latest updates Tamil Nadu monsoon 2019 forecast : சென்னையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து கொண்டிருந்த காரணத்தால் சென்னையின் வெப்பநிலை கணிசமாக குறைந்துவிட்டது. ஆனால் விசாகப்பட்டினம் அருகே புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட உள்ளதன் காரணமாக சென்னைக்கு மழைப்பொழிவு கணிசமாகவே இருக்கும். கடலில் உருவாகும் குளிர்ந்த காற்று பல்வேறு இடங்களில் மழைக்கான வாய்ப்பினை உருவாக்கலாம்.
தமிழகத்தில் அதிகமாக நேற்று சென்னை டிஜிபி அலுவலகம் அருகே 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மும்பையில் கொட்டித் தீர்த்தது கனமழை. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்னும் பருவமழை ஆரம்பிக்கவில்லை. ஆனால் பருவமழை மேலே நகரும் போது கூர்க் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும்.
மேலும் படிக்க : Tamil Nadu Weather : ‘தமிழகத்திற்கு ஜூலை மாதம் கொண்டாட்டம் தான்’ – தமிழ்நாடு வெதர்மேன்
இன்று எங்கே மழை பெய்யும்?
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று கோவை, நீலகிரி, விழுப்புரம், சென்னை, காஞ்சி, மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளது.
வெப்பநிலை
வழக்கத்திற்கு மாறாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை
வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு ஆங்காங்கே வாய்ப்புகள் உள்ளன. குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். அதிகபட்ச வெப்பநிலையாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்.
மேலும் படிக்க : ஜூலை 1-ம் தேதிக்குப் பிறகு தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!