Chennai weather news, Chennai weather news today, Tamil Nadu weather, Tamil Nadu news weather, weather news in Tamil, Chennai weather forecast,
TN Weather Updates: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisment
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாவிட்டாலும் இரவு நேரங்களில் மட்டும் அவ்வப் போது மழை பெய்து வருகிறது.
பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி இருந்ததால் வெயிலின் தாக்கம் குறைந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறியாகியில், "காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம். காற்றின் திசைவேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது.