காட்டுத் தீ ஏற்பட்டு 8 மாதங்களுக்கு பிறகு குரங்கணியில் மீண்டும் தொடங்கியது ட்ரெக்கிங்...

போடி வனச்சரகருக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பி மாவட்ட வன அலுவரின் ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே ட்ரெக்கிங்

குரங்கணி மலைப் பகுதி : தேனி மாவட்டம், போடி நாயக்கனூர் பகுதியில் அமைந்திருக்கிறது குரங்கணி மலைப் பகுதி. சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் அட்வென்ச்சர் சீக்கர்ஸ் மலையேற்றப் பயிற்சிக்காக அடிக்கடி அந்த வனப்பகுதியில் தங்கி பயிற்சி மேற்கொள்வது வாடிக்கை.

முறையான பாதுகாப்புகள் மற்றும் முன்னேற்பாடு வசதிகள் ஏதும் இல்லாமல் தான் அந்த பகுதியில் ட்ரெக்கிங் செய்து கொண்டிருந்தார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் குரங்கணி மலைப்பகுதியில் பயங்கரமான காட்டுத்தீ ஏற்பட்டது. அந்த காட்டுத் தீயில் சிக்கி 23 பேர் பரிதாபமாக உயிரிழிந்தனர்.

குரங்கணி மலைப் பகுதி, தேனி

குரங்கணி மலைத் தொடர்

குரங்கணி மலைப் பகுதி : டாப் ஸ்டேசன் வரை மட்டுமே ட்ரெக்கிங்

இதனைத் தொடர்ந்து வனப்பகுதிக்குள் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டது. 8 மாதங்கள் கழித்து மீண்டும் மலையேற்ற பயிற்சிகளுக்கு அப்பகுதியில் அனுமதி அளித்திருக்கிறது வனத்துறை. குரங்கணியில் இருந்து டாப் ஸ்டேசன் வரை மட்டுமே ட்ரெக்கிங் செய்ய வேண்டும், காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும் படிக்க : குரங்கணி தீ விபத்தில் இருந்து தப்பித்த பெண்களின் திகில் அனுபவம்

மேலும் அப்பகுதியில் ட்ரெக்கிங் செல்ல வேண்டும் என்றால் போடி வனச்சரகருக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பி மாவட்ட வன அலுவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close