/tamil-ie/media/media_files/uploads/2022/05/try-corporation.jpg)
Trichy corporation introduces citizen app for grievances: திருச்சி மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் சேவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே இருக்கும் மொபைல் அப்ளிகேஷனான 'திருச்சி சிட்டிசன் செயலி'க்குப் பதிலாக, புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த செயலியில் மாநகராட்சி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களின் விவரங்கள் இடம் பெறும். இதில் மாநகர வாசிகள் முன்பதிவு செய்து தேவைகளை நிவர்த்தி செய்யலாம்.
இதையும் படியுங்கள்: கே.என் நேரு, ராமஜெயம் பற்றி பகீர் பேச்சு: சூர்யா சிவா மீது ஐ.ஜி- யிடம் தி.மு.க புகார்
அது மட்டும் அல்லாமல் புகார்கள் அளிக்கும் வசதி, வரி செலுத்துதல் போன்ற அம்சங்களும் இடம்பெறுகிறது. மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான ஒரு இடத்தையும் ஒதுக்கியுள்ளனர்.
இந்த புதிய செயலிக்கு திருச்சி சிட்டிசன் ஆப் என பெயரிடப்பட்டுள்ளது. ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்குள் புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தத்தம் பகுதியில் உள்ள நிறைகுறைகளை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உடனடியாகவும், நேரடியாகவும் தெரிவிக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுகின்றது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்; திருச்சி மாநகராட்சி சார்பில் கொண்டுவரப்படும் புதிய செயலியானது பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாகவே இருக்கும். தற்போதைய கால சூழலுக்கேற்ப இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
இருப்பினும், ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த செயலி உபயோகமாக இருக்கும். மற்றவர்களுக்கு உதவாது என்றாலும், பெரும்பாலான மக்களிடம் தற்போது ஸ்மார்ட் போன் வசதி இருப்பதால் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு இந்த செயலி மூலம் உதவ முடியும் என்றார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.