scorecardresearch

அன்பில் மகேஷ் குறித்து அவதூறு; அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார்

அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பாக அவதூறு பரப்புவதாக குற்றச்சாட்டு; தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார்

Trichy
அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார்

அமைச்சர் அன்பில் மகேஷ் தொடர்பாக அவதூறு பரப்புவதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது திருச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்: கோடை வெயிலில் சிக்னல்களில் பயணிகள் காத்திருப்பை தவிர்க்க நடவடிக்கை: பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ்

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ட்விட்டர் கணக்கில் அவதூறாகவும் உண்மைக்கு மாறான பொய்யான கற்பனை செய்யப்பட்ட படங்களையும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார் என்றும், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாக அண்ணாமலை பேசுவது போல், அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழியின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டுள்ளனர் என்றும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் முரளிதரன் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து உண்மைக்கு மாறாக பொய் செய்தியை பரப்பிய பா.ஜ.க தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்துள்ளார்.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy lawyer files case against bjp leader annamalai for defaming anbil mahesh

Best of Express