/tamil-ie/media/media_files/uploads/2018/10/bla.jpg)
நக்கீரன் கைது டிடிவி தினகரன் கருத்து
நக்கீரன் கைது டிடிவி தினகரன் கருத்து : இன்று காலை சென்னை விமான நிலையத்தில், நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால், புனே செல்வதற்காக வந்தார். அவரை ஆளுநரின் பணியில் குறிக்கிட்டதாக கூறி, தேச விரோத வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். சிந்தாதாரி பேட்டையில் இருக்கும் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்தது தமிழக காவல் துறை. இது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
இந்நிலையில் டிடிவி தினகரன் நக்கீரன் கைது சரியே என்ற வகையில் பேசியிருக்கிறார். ஆதாரமற்ற செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நக்கீரன் போன்றவர்களின் கைது சரியே என்ற வகையில் பேசியிருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் “எந்தவித ஆதாரமும் இல்லாமல் தனிநபர்கள் மீது அவதூறாக செய்திகளை வெளியிடுவது தவறு” என்று அவர் நக்கீரனின் கைதிற்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.