Tuticorin government school teachers provided Rs 1 lakh worth relief goods : கொரோனா ஊரடங்கினால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் வறுமையில் வாடும் பள்ளி மாணவர்களின் குடும்பத்திற்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளனர் அரசு பள்ளி மாணவர்கள்.
Advertisment
தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி அமைந்துள்ளது நாலாட்டின்புதூர் என்ற கிராமம். இக்கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் பல கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நாலாட்டின்புதூரில் அமைந்திருக்கும் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைப்பள்ளி பயின்று வருகின்றனர்.
மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர்களின் குடும்பத்தினர் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். நாலாட்டின்புதூர், முடுக்குமீண்டான்பட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் பலரும் விவசாயக்கூலி, கட்டடவேலை, ஆடு, மாடு மேய்த்தல், கூடை பின்னுதல், தீப்பெட்டி ஆலைக்கூலி, பட்டாசு ஆலைக்கூலி என தினசரி கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஊடரங்கால் அவர்கள் சிரமப்பட்டு வரும் விவகாரம் சாரதா பள்ளி தலைமை ஆசிரியர் சீனிக்கு தகவல் வந்துள்ளது.
தலைமை ஆசிரியர் சீனி, சாரதா பள்ளியில் பணிபுரிந்து வரும் சக ஆசிரியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு மிகவும் சிரமப்படும் 100 குடும்பங்களை பட்டியல் எடுத்துள்ளனர். அவர்களுக்கு தேவையான 10 கிலோ அரிசி, ரூ.500 மதிப்புள்ள மளிகைப் பொருள்கள் மற்றும் முகக் கவசங்களை நிவாரணப் பொருட்களாக வழங்கியுள்ளனர். இதற்கு 1 லட்சம் ரூபாய் வரை அவர்கள் செலவு செய்துள்ளனர்.
நிவாரண உதவிகளைப் பெற வந்தவர்கள் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை பள்ளி வளாகத்தில் வைத்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil