/tamil-ie/media/media_files/uploads/2020/11/TV-Actor-Murdered-for-Illegal-Relationship.jpg)
தொலைக்காட்சி நடிகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், அடுத்த நாள் இது தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் 30 வயது நபரை கைது செய்தனர். அந்த நபர் விருதுநகரைச் சேர்ந்த விஜயக்குமார் என்றும், அவரது மனைவி நடிகர் செல்வரத்தினத்துடன் தகாத உறவு கொண்டிருந்ததாகவும், விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
விருத்தாசலம் சிறையில் கைதி மரணம்: ஆதாரம் வெளியிட்ட வேல்முருகன்
சனிக்கிழமை, செல்வரத்தினம் படப்பிடிப்புக்குச் செல்லவில்லை, உதவி இயக்குநரான நண்பர் மணியுடன் தங்கியிருந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததும், அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்.
பின்னர், அண்ணா நெடும்பாதையில் அடையாளம் தெரியாத நபர்களால் நடிகர் வெட்டிக் கொல்லப்பட்டது மணிக்கு தெரிய வந்திருக்கிறது.
கணவர் கொலை செய்ய சென்னை வந்துக் கொண்டிருக்கிறார் என விஜயகுமாரின் மனைவியிடமிருந்து செல்வரத்தினத்துக்கு அழைப்பு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இருப்பினும், அவரது எச்சரிக்கையை புறக்கணித்த செல்வரத்தினம், விஜயக்குமாரை சமாளிப்பதாக கூறியிருக்கிறார்.
தொகுதி பங்கீட்டில் யதார்த்த அணுகுமுறை… பேரம் இருக்காது – காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ்
இறந்தவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரும் இலங்கை அகதிகள் என்றும், செல்வரத்தினம் விஜயகுமாரின் மனைவியுடன் எட்டு மாதங்களுக்கு முன்பு உறவை வளர்த்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இது பற்றி விஜயகுமாருக்கு தெரிய வர, செல்வரத்தினத்திடம் இருந்து விலகி இருக்குமாறு மனைவியை எச்சரித்துள்ளார். ஆனால் இதை அவரது மனைவி ஏற்காமல், செல்வரத்தினத்துடன் நேரத்தை செலவிட அடிக்கடி புதுச்சேரிக்குச் சென்றிருக்கிறார். இதனால் அவரை தீர்த்துக் கட்ட முடிவு செய்திருக்கிறார் விஜயகுமார். இதையடுத்து அவர் திங்கள்கிழமை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.