பெண்களை அவமரியாதை செய்வதா? உதயநிதி பேச்சுக்கு டிடிவி தினகரன் – குஷ்பு கண்டனம்

ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியது, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

udhayanidhi, kushboo, kushbu, ttv dinakaran, dmk, bjp, ammk, குஷ்பு, டிடிவி தினகரன், உதயநிதி, சசிகலா, உதயநிதி சசிகலா குறித்து சர்ச்சை பேச்சு, udhyanidhi controversy speech on sasikala,

Udhayanidhi Stalin News: ஜெயலலிதாவின் தோழி சசிகலா குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியது, பெண்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளதாக பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “மோடிக்கு எடுபிடியாக ஆட்சி செய்து வருவதால் எடப்பாடி ஆட்சியை எடுபிடி ஆட்சி எனக் கூறுகிறோம். டெட்பாடி ஆட்சி என்கிறார்கள். சசிகலா கால்ல அப்படி தானே விழுந்து கெடந்தாரு. டேபிள், சேர்குள்ளலாம் புகுந்து விழுந்து கெடந்தாரு” என்று பேசியதோடு மிகவும் மோசமான வார்த்தையையும் பேசினார். உதயநிதியின் இந்த சர்ச்சை பேச்சைக் கேட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் பலரும் சிரித்தனர். அந்த நிகழ்வில் உதயநிதி சர்ச்சைகுரிய வகையில் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானதால் உதயநிதிக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனங்களைத் தெரித்துள்ளனர்.

உதயநிதியின் சர்ச்சை பேச்சுக்கு சசிகலாவின் சகோதரி மகனும், அமமுக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெருந்தலைவர் காமராஜர் உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களை எல்லாம் இழிவுபடுத்தி பேசிய தீயசக்தி கருணாநிதியின் பேரன் என்பதை மு.க.ஸ்டாலினின் மகன் நிரூபித்திருக்கிறார். கண்ணியத்திற்கும் தி.மு.கவுக்கும் ஒரு நாளும் சம்பந்தமே இருந்ததில்லை என்பதற்கு இது இன்னொரு சாட்சி.

நெஞ்சம் முழுக்க அழுக்கும், துர்சிந்தனையும் நிரம்பிய ஒருவரால்தான் இப்படி வக்கிரமாக பேச முடியும். தானும் ஒரு பெண்ணின் வயிற்றில் பிறந்தவர் என்பதை மறந்துவிட்டு பேசியிருக்கிறார். அவர் வந்த வழி அப்படி. பெண்களை பெரிதும் மதிக்கிற தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய குணம் கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வருத்தமளிப்பதாக உள்ளது” என்று கண்டனம் தெரிவித்தார்.

நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம், பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா எனக் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் அவர், “எவ்வளவு அருவருப்பான வார்த்தை அது. உதயநிதி சொன்னது நகைச்சுவை அல்ல. பெண்களைப் பற்றி இரட்டை அர்த்தத்தில் தெளிவாகக் கூறிய மோசமான வார்த்தைகள் அவை. வெறுப்பு அரசியலை விட்டுவிட்டு ஆக்கப்பூர்வமாக திமுகவால் எதையாவது பேச முடியுமா எனக் கேள்வி எழுப்பினார்.

உதயநிதி ஏன் இப்படிப் பேசினார்? திமுக ஆதரவாளர்களும் எதிர்ப்பு

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, சசிகலா குறித்து பேசியிருப்பது பெண்களை அவமதிப்பதாக உள்ளதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Uddhayanidhi controversy speech on sasikala ttv dinakaran kushboo condemning udhyanidhi

Next Story
நேரடி விவாதத்திற்கு தயார் மிஸ்டர் பழனிச்சாமி: மு.க.ஸ்டாலின் அறிக்கைmk stalin challenge to cm palaniswami, mk stalin challenge to edappadi palaniswami, mk stalin open challenge to palaniswami mk stalin challenge to discuss about corruption, tamil nadu assembly elections 2021, முக ஸ்டாலின், முதல்வர் பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, முக ஸ்டாலின் சவால், முதல்வர் பழனிசாமிக்கு முக ஸ்டாலின் சவால், mk stalin, dmk, aiadmk, cm edappadi k palaniswami
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com