Advertisment

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் விமர்சனங்களை கடந்து செயல்படுத்த வேண்டும் - கோவையில் உ.பி ஆளுநர் பேச்சு

தேசிய கல்விக் கொள்கையை அரசியல் விமர்சனங்களை கடந்து செயல்படுத்த வேண்டும் - கோவையில் உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் பேச்சு

author-image
WebDesk
New Update
தேசிய கல்விக் கொள்கையை அரசியல் விமர்சனங்களை கடந்து செயல்படுத்த வேண்டும் - கோவையில் உ.பி ஆளுநர் பேச்சு

கோவை அவிநாசி லிங்கம் கல்வி குழுமத்தில் தேசியத்தர மதிப்பீட்டு அளவுகோல்களை வளர்க்கும் அவினாசி லிங்கம் உயர்கல்வி நிறுவனத்தின் சிறந்த நடைமுறைகள் என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது.

Advertisment

இதில் சிறப்பு விருந்தினராக உத்தரபிரதேச மாநிலத்தின் ஆளுனர் ஆனந்திபென்படேல் கலந்து கொண்டார். இந்நிகழ்வில், அவர் அண்டை மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களில் சமூகவியல், இயற்பியல், வேதியல், கணினி துறை, உணவு பதப்படுத்தும் துறைகளில் கருத்தரங்கு நடத்தி வெற்றி பெற்ற அவினாசிலிங்கம் கல்லூரியின் 16 மாணவிகளுக்கு  விருதுகள் வழங்கினார்.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு; கடந்த 7 ஆண்டுகளில் நடந்தது என்ன?

தொடர்ந்து நிகழ்ச்சியில் மாணவர்கள் மத்தியில் அவர் பேசும் போது...

நான் எனது கவர்னர் பணியில் இருந்து மூன்று ஆண்டுகளில் 75 மாவட்டங்கள் உத்திரபிரதேசத்தில் ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அதேபோல பெண்களுக்கான பிரச்சனைகள், சிறையில் இருக்கும் பெண்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளேன்.

2050 இல் இந்தியா காச நோய் இல்லாத நாடாக மாறும். அதேபோல உத்தரபிரதேசத்தில் 85 ஆயிரம் காச நோயாளர்களை பராமரித்து வருகிறோம்.

தேசிய கல்விக் கொள்கை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வந்துள்ளது. இது நல்ல கல்வி கொள்கை. இதை விரைவாக செயல்படுத்த வேண்டும். அரசியல் விமர்சனங்களை கடக்க வேண்டும்.

புதிய கண்டுபிடிப்புகள் நடத்தப்பட வேண்டும், புதிய இலக்குகளை அடைய வேண்டும்.  இதனுடன், தேசியக் கல்விக் கொள்கை 2020ல் மொழி, நாகரிகம், கலாச்சாரம், சமூகம் ஆகியவை உரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன என்பதையும் நான் கூற விரும்புகிறேன்.  இந்தக் கொள்கையின் தொலைநோக்கு இந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு புதிய பரிமாணங்களை அமைக்கும் வாய்ப்பாகும்.

publive-image

புதிய இந்தியாவை உருவாக்குவதில் தங்கள் பங்கை மறுவரையறை செய்ய உயர்கல்வி நிறுவனங்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.  சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம், இந்தியக் கல்வியின் புகழ்பெற்ற வரலாற்றை மீட்டெடுக்க முடியும்

இந்தியாவை விஸ்வகுருவாக நிறுவ முடியும்.தேசிய கல்விக் கொள்கையின் தன்மை இந்திய கொள்கையை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதன் மூலம் இந்திய அறிவோடு மாணவர்களிடம் இந்தியத் தேவைகளுக்கேற்பத் திறன்கள் வளர்க்கப்படும். அது பல்திறமை வாய்ந்த இளைஞர்களை உருவாக்கி அவர்களில் தேசத்தின் மீதான மரியாதையை எழுப்பும் .  ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கும் சிறந்த அறிவு சென்றடைய வேண்டும் என்பதே இந்தக் கொள்கையின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

பி.ரஹ்மான், கோவை

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment