கொரோனா வைரஸ் பரவல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நடிகர் வடிவேலு தனது ட்விட்டரி அக்கவுன்ட் மூலம் தொடர்ந்து உருக்கமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில், " கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்" என்று மனதார கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,000 ஐத் தாண்டியுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி நோய்த் தாக்குதல் ஏற்பட்டவர்களில் 7,695 பேர் குணமாகியுள்ளனர். நாட்டில் 31,332 பேருக்கு கோவிட்-19 தாக்குதல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தொடர்பாக, நடிகர் வடிவேலு வெளியிட்ட முந்தைய இரண்டு வீடியோக்களை இங்கே காணலாம்.
'வீட்ட தாண்டியும், ரோட்ட தாண்டியும் வரக்கூடாது.. போச்சா... போச்சா’ : வடிவேலு வீடியோ
வைரஸாக வந்த நீ, பாடம் புகட்டிவிட்டாய் - வடிவேலுவின் உருக்கமான குரலில் வைரலாகும் வீடியோ
காவல்துறைக்கு ஆதரவளிப்போம் என்ற தலைப்பில் இந்த மூன்றாவது வீடியோவை வடிவேலு வெளியிட்டார்.
காவல்துறைக்கு ஆதரவளிப்போம் pic.twitter.com/yz5NUP71yI
— Actor Vadivelu (@VadiveluOffl) April 27, 2020
என்னமோ நடக்குதுங்க, கடவுள் இறங்கிட்டான்.... கடவுள் எல்லாரையும் சோதிக்கிறான். இந்தச் சோதனையில எல்லாரும் பாஸ் ஆயிரணும். கொஞ்சம் வேதனையாத் தான் இருக்கும். இந்த சோதனையில நம்ம எல்லாருமே..... மனித இனமெல்லாம் ஒன்னு சேரனும். போலிஸ் ஒன்னும் வேனும்னு அடிக்கலங்க... அடிச்ச மக்கள் கேப்பாங்கன்னு அடிக்கிறாங்க. அவுங்க கேக்கும் போது, கரக்ட்டான காரணம் சொன்ன விட்டுறாங்க..... அவுங்க உசுற பணயம் வச்சு ரோட்ல நிக்கிறது எதுக்கு, நம்மல காப்பாத்துரத்துக்கு தான. நமக்கு அவுங்க உதவி பண்றாங்க...
முன்னெல்லாம், கலவரம் நடந்தா தான லத்தி சார்ஜ் பண்ணனும், இப்ப உசுர காப்பாத்துறதுக்கு லத்தி சார்ஜ் பண்ண வேண்டிய சூழல் இருக்கு. கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க ... எல்லாம் கடவுள் கும்பிடிங்க" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.