மி டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து இன்று வீடியோ மூலம் விளக்கம் அளித்ததை தொடர்ந்து பாடகி சின்மயி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக மி டூ என்ற பிரச்சாரம் ஒன்று இந்தியா முழுவதும் சூடு பிடித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுயை மி டூ (அதாவது நானும் பாதிக்கப்பட்டுள்ளேன்) என்று பதிவிட்டு வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் பாலிவுட் பிரபல நடிகர் நானா படேகர் முதல் தமிழ் திரையுலக பாடலாசிரியர் வைரமுத்து வரை பலர் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக வைரமுத்து குறித்து சின்மயி பல்வேறு குற்றச்சாட்டுகளை பலர் சார்பாக கூறி வருகிறார்.
பாடகி சின்மயி ட்வீட் :
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து கவிஞர் வைரமுத்து முன்னதாக தனது டுவிட்டரில் எழுத்துகள் மூலம் பதில் அளித்திருந்தார். ஆனால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் விஸ்வரூபம் எடுப்பதை தொடந்து இன்று வீடியோ மூலம் ‘என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்து பொய். அவர்கள் சொல்வது உண்மை என்றால் வழக்கு தொடரட்டும். அதை சந்திக்க நான் தயாராக உள்ளேன். நான் நல்லவனா கெட்டவனா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்’ என்று பேசியிருந்தார்.
'வழக்கு போடுங்க; சந்திக்க தயார்' - சின்மயி புகாருக்கு வைரமுத்து விளக்கம்
இதனை தொடர்ந்து, சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘கவிஞர் வைரமுத்து உண்மை கண்டறியும் சோதனையை நடத்திகொள்ள வேண்டும்.’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
October 2018
நாளுக்கு நாள் மி டூ விவகாரம் உச்சத்தை அடைந்து வருகிறது. இது தொடர்பாக முறையான விசாரணை எதுவும் இன்னும் தொடங்கப்படவில்லை.