ஐக்கிய அரபு நாடுகள், துபாயில் இருந்து இரண்டு சிறப்பு விமானங்கள் சனிக்கிழமை காலை சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. துபாயில் இருந்து வந்த முதல் விமானத்தில் குழந்தைகள் உட்பட 182 இந்தியர்கள் பயணம் செய்தனர். அடுத்த விமானத்தில் 177 பேர் வந்தனர். முதலில் வந்த விமானத்தில் 182 பேருக்கும் ஸ்கிரீனிங் தொடங்கியிருக்கிறது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள், என அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவித்தது.
ஆன்லைனில் மது விற்பனை: தமிழகத்தில் சாத்தியமா?
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை, ’வந்தே பாரத் மிஷன்’ மூலம் மீட்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கியது. இரண்டாம் கட்டமாக வெள்ளிக்கிழமை நான்கு விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்தன. 152 இந்தியர்களுடன் பக்ரைனில் இருந்து வந்த விமானம் கொச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. சிங்கப்பூரிலிருந்து, 234 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா விமானம், டெல்லியை அடைந்தது. டாக்காவில் இருந்து வந்த மற்றொரு விமானம் ஸ்ரீ நகரை அடைந்தது. அடுத்ததாக ரியாத்தில் இருந்து வந்த விமானம், கோழிக்கோட்டில் தரையிறங்கியது.
உங்கள் கனவுக்கு ஏற்ப வாய்ப்பு: எஸ்பிஐ-யின் இந்த சேமிப்பு வசதி தெரியுமா?
வந்தே பாரத் மிஷன் மூலமாக 64 விமானங்களும், மூன்று கப்பல்களும் 15000 இந்தியர்களை சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”