கேரளாவிற்கு 15 லட்சம் நிதி உதவி வழங்கினார் தொல்.திருமாவளவன்

மிக விரைவில் கட்சி சார்பாக நிவாரணப் பொருட்களை அனுப்பவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்...

கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக விடுதலைச் சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 15 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத மழையால் உடமைகள் அனைத்தையும் இழந்து தவித்து வருகிறார்கள் கேரள மக்கள். அவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சிகள், மாநில அரசுகள், மற்றும் பிரபலங்கள் தங்களால் இயன்ற அளவு நிதி உதவி செய்து வருகிறார்கள்.

இதுவரை கேரள வெள்ளத்திற்காக முதலமைச்சர் நிவாரண நிதியின் கீழ் ரூபாய் 1000 கோடி நிதி கிடைத்துள்ளது என நேற்று முன் தினம் (30/08/2018) கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசாக் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் பதிவிட்டார்.

ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவி தொடர்பான செய்தியைப் படிக்க 

தொல்.திருமாவளன் – பினராயி விஜயன் சந்திப்பு

தமிழகத்தில் இருந்து திமுக, நாம் தமிழர் போன்ற கட்சிகளைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைக் கட்சி சார்பில் ரூபாய் 15 லட்சம் நிதியை திரட்டி அதனை கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் கொடுத்துள்ளனர்.

இந்த நிதிக்கான காசோலையை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பினராயி விஜயனை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். மேலும் அம்மாநில மக்களுக்குத் தேவையான ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மிக விரைவில் கட்சி தலைமை அலுவலகத்திடம் இருந்து அனுப்பபடும் என்றும் கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைக் கட்சி வெளியிட்ட அறிக்கை

தொல்.திருமாவளவன், கேரள வெள்ளம், கேரள மழை, வெள்ள நிவாரண நிதி

கட்சி அறிக்கை

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அக்கட்சி அறிக்கையில், நிதி வழங்கியவர்களுக்கும், பொருட்கள் வழங்கியவர்களுக்கும் தங்களுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளது. மேலும் நிதி வழங்க விரும்புபவர்கள் கட்சித் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close