30 வயதாகும் வீரலட்சுமி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிக்கும் போது, ஆண்களால் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தும் ஒரு தொழிலில் இறங்கிய முதல் பெண்மணியாக அவர் இருப்பார் என்பதை அறிந்திருக்கவில்லை.
’அடுத்தாண்டு சி.எஸ்.கே-வுக்காக ரெய்னா விளையாடுவாரா?’ சீனிவாசன் பதில்
வீரலட்சுமியின் கணவர் முத்துகுமார் சென்னையில் டாக்ஸி ஓட்டுநராக 15 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வருகிறார். தற்போது வீரலட்சுமி தனது கணவருடன் சென்னை திருவேற்காடு பகுதியில் வசித்து வருகிறார். சிதம்பரத்தில் டிப்ளமோ ஆட்டோ மொபைல் படித்த இவர் சென்னையில் கடந்த 3 வருடங்களாக தனது கணவருக்கு உதவியாக கால் டாக்ஸி ஓட்டி வந்துள்ளார். இதற்கிடையே கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் போடிக்கு வந்துள்ளார்.
அப்போது தேனி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் நோயாளிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த பயிற்சியும் பெற்றுள்ளார். தற்போது சென்னையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சசிகலாவின் ரூ.300 கோடி பினாமி சொத்துக்கள் : அதிரடியாக முடக்கிய வருமான வரித்துறை
இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் வீரலட்சுமி, தனது வார்த்தைகளை விட, செயல்கள் அதிகமாக பேசப்பட வேண்டும் என நினைக்கிறார். நான் தான் முதல் பெண் ஆம்புலன்ஸ் டிரைவராக இருப்பேன் என நினைக்கவே இல்லை. இந்த வேலைக்கு விண்ணப்பித்திருந்தேன். நேர்க்காணலுக்கு சென்றதும் தான், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பித்த ஒரே பெண் என தெரிந்துக் கொண்டேன். 108 ஆம்புலன்ஸ் அதிவேகமாக ஓட்டுவதில் எனக்கு எந்த பயமும் இல்லை. என்னைபோல் அனைத்து பெண்களும் மக்களுக்கு சேவை செய்யும் விதத்தில் பல்வேறு பணிகளில் சேர வேண்டும்” என்றார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், இந்த தகவலை ட்விட்டரில் பகிர்ந்து வீரலட்சுமிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”