Vellore Election News : இன்று நடைபெறும் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் மட்டும் பெரிய கட்சியினர் உட்பட 28 வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இதில் மிக முக்கியமான வேட்பாளர்களாக களம் இறங்கியிருப்பவர்கள் ஏசி சண்முகம் மற்றும் திமுகவின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க :
தொகுதி நிலவரம்
இந்த தொகுதியில் மொத்தம் 14 லட்சம், 38 ஆயிரத்தி, 643 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 1,553 வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன. காலையில் 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெறும். 179 வாக்குச்சாவடிகளில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்று கண்டறிந்து அங்கு பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த லோக் சபா தேர்தலில் பதிவான வாக்குகளின் சதவீதம் 74.46% ஆகும். தேர்தல் முடிவுகள் ஆகஸ்ட் 9ம் தேதி அறிவிக்கப்படும்.
மேலும் படிக்க : முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் இறுதிநேர பிரசாரம்
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, மாவட்ட தேர்தல் அதிகாரி வேலூர் தேர்தலில் 72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.94% வாக்குகள் பதிவாகி உள்ளன.
வேலூர் மக்களவைத் தொகுதியில் மாலை 5 மணி வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம்:
வேலூர் – 58.55%
அணைக்கட்டு – 67.61%
கே.வி.குப்பம் – 67.01%
குடியாத்தம் – 67.25%
வாணியம்பாடி – 52%
ஆம்பூர் – 52%
வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 3 மணி வரை 52.32% வாக்குகள் பதிவாகி உள்ளன
வேலூர் மக்களவைத் தொகுதியில் மதியம் 3 மணி வரை சட்டமன்றத் தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம்:
வேலூர் – 54.93%
அணைக்கட்டு – 62.76%
கே.வி.குப்பம் – 55.52%
குடியாத்தம் – 44.38%
வாணியம்பாடி – 46.71%
ஆம்பூர் – 50.86%
அமைச்சர் நிலோஃபர் கபில் தன்னுடைய வாக்கினை, வாணியம்பாடியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் பதிவு செய்தார்.
வேலூர் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 7.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கே.வி. குப்பத்தில் 8.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைவாக அணைக்கட்டுப் பகுதியில் 6.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.வேலூர் தொகுதியில் 8.79%, குடியாத்தம் தொகுதி – 6.79%, வாணியம்பாடி – 6.29%, ஆம்பூர் – 7.76% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய பலத்தினைப் பெறும் என்றும் அங்கீகாரத்தினை பெறும் என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். மேலும் வேலூரில் ஏ.சி. சண்முகம் வெற்றி பெற இறைவனை வேண்டிக் கொள்கின்றேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
வேலூரில் உள்ள வள்ளலார் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு வருகிறார் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம். செய்தியாளார்களிடம் பேசிய அவர் “அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றும் கூறியுள்ளார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 14,32, 555 வாக்காளர்கள் உள்ளனர்.
அதில் ஆண்கள்- 7,01,351
பெண்கள்- 7,31,099
மூன்றாம் பாலினம்- 105
இன்று வேலூரில் உள்ள 1553 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வகையில் பாதுகாப்பினை உறுதி செய்ய வடக்கு மண்டல ஐ.ஜி. நாகராஜன் தலைமையில் 5 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1998 விவிபாட் கருவிகள் இங்கு பயன்படுத்தப்பட உள்ளன.
வேலூர் மாவட்ட ஆட்சியர் இன்று காலை தன்னுடைய வாக்கினை மாடல் பூத்தில் பதிவு செய்தார். பிறகு முதன்முறையாக வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு மரக்கன்றுகளை கொடுத்து வரவேற்று பேசினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இன்றைய தேர்தலில் 75%க்கும் மேல் வாக்குகள் பதிவாகலாம் என்றும், 11 ஆவணங்களில் ஒன்றை காண்பித்து வாக்களித்துக் கொள்ளலாம் என்றும் கூறினார். மேலும் பூத் ஸ்லிப் கட்டாயம் இல்லை என்பதையும் உறுதி செய்தார்.