/tamil-ie/media/media_files/uploads/2018/08/vijayantha-at-karunanidhi-memorial.jpg)
vijayanth at karunanidhi memorial, விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் , அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பினார். நேராக அவர் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ம் தேதி உடலமின்றி உயிரிழந்தார். அவர் உடல் சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைவுக்கு பிறகு மெரினாவில் அவருக்கு அமைக்கப்பட்டிருக்கும் நினைவிடத்திற்கு சென்று பல அரசியல் தலைவர்களும் திரையுலக பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்:
சமீபத்தில் நடிகை திரிஷா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் விஜய் என பலரும் நேரில் கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத நிலையில், மெரினாவில் உள்ள அவரது சமாதிக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சென்னை திரும்பிய நடிகர் விஜய்.. காலை 4 மணிக்கு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி!
இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று அதிகாலை 2மணிக்கு சென்னை திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தை வந்தடைந்த அவர் நேராக கருணாநிதி நினைவிடம் சென்று அங்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
/tamil-ie/media/media_files/uploads/2018/08/9497015b-ab4b-4a45-8b33-af72ea737c4e-1.jpg)
அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நேரத்தில் தான் கருணாநிதி மறைந்தார்.
வீடியோவில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்!
அவரின் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாததால் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் அவர் அதிகாலையில் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.