Vilavancode MLA S Vijayadharani IE Tamil Facebook live : காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவான மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும், விளவங்கோடு எம்.எல்.ஏ.வுமான விஜயதரணி இன்று நம்முடன் ஐ.இ. தமிழ் முகநூல் நேரலையில் இணைகிறார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவுகள் சரியா? எதிர்கட்சி வைக்கும் முக்கிய வேண்டுகோள்கள் என்னென்ன? எதிர்கட்சியின் கருத்துகளுக்கு முதல்வரும் பிரதமரும் செவிசாய்க்க வேண்டுமா? என்பது போன்ற பல்வேறு முக்கிய கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார் விஜயதரணி.
மேலும் படிக்க : Corona Updates Live : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியது
கொரோனா தொடர்பாக உங்களின் கேள்விகள் குறித்தும் கருத்துகள் குறித்தும் விஜயதரணியிடம் பேச இது அருமையான வாய்ப்பாக அமையும். நீங்கள் உங்களின் கருத்துகளை அவருடன் பகிர்ந்து கொள்ள செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான். சரியாக இன்று மாலை 5 மணிக்கு எங்களின் முகநூல் பக்கமான – https://www.facebook.com/IETamil/-ல் இணைந்திருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil