பளார்! பளார்! எஸ்ஐ கன்னத்தில் விட்ட பெண்… வைரல் வீடியோவால் பரபரப்பு!

முத்துராமனின் மனைவி, கோபத்தில் எஸ்.ஐயின் கன்னத்தில் பளார் என

By: Updated: July 8, 2020, 10:33:18 AM

viral news tamil today :கணவனை போலீசார் தாக்கியதால் ஆவேசத்துடன் பெண் ஒருவர், சப் இன்ஸ்பெக்டர் கன்னத்தில் பளார் என ஓங்கி அறையும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், திருவெண்ணெய் நல்லூரில் வசித்து வருபவர் முத்துராமன்.இவர் தற்போது அரசின் இலவச வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டி வருகிறார்.  வீடு கட்டும் பொறுப்பை சுபாஷ் என்பவர் கவனித்து வந்துள்ளார். வீடு கட்டுவது தொடர்பாக முத்துராமனுக்கும், சுபாஷுக்கும் பணத் தகராறு எழுந்துள்ளது.

இது குறித்து முத்துராமன் மீது சுபாஷ் திருவெண்ணெய் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  பணியில் இருந்த எஸ்.ஐ. தங்கவேல், போலீஸ்காரர் முருகன் ஆகியோர் முத்துராமனை விசாரிக்க வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது போதையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த முத்துராமனை போலீசார் அடித்துள்ளதாக தெரிகிறது. புகார் குறித்து விசாரிக்க வந்த எஸ்.ஐ., தனது கணவரை எதுவும் விசாரிக்காமல் அடித்ததைக் கண்ட முத்துராமனின் மனைவி, கோபத்தில் எஸ்.ஐயின் கன்னத்தில் பளார் என அறைகிறார்.

மேலும், போலீசார் அடித்ததில் முத்துராமனுக்கு மூக்கில் மற்றும் வாயில் ரத்தம் கொட்டுகிறது. இதைப்பார்த்த ஊர்மக்களும் கூட்டம் கூடி போலீசாரிடம் கேள்வி எழுப்புகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு காவல் துறையினர் குறித்த பல வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த வீடியோவும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. விசாரிக்க வந்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல் போதையில் இருந்தவரை தாறுமாறுமாக அடித்தது தான் இந்த பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர் கிராம மக்கள்.

ஊரடங்கில் ஊதிப் போகாமல் இருக்க சிம்பிள் டிப்ஸ் – அலட்சியம் வேண்டாம்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Viral news tamil today viral news viral video police lady viral video

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X