Tamil Nadu's Coimbatore college girl death incident: கோவை மாணவி லோகேஸ்வரி இறுதி நிமிடங்கள் VIDEO: இந்தக் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. 2-வது தளத்தில் இருந்து குதிக்க மறுத்து தயங்கும் லோகேஸ்வரியை தள்ளி விடுவது கொடூரம்!
கோவை மாணவி லோகேஸ்வரி மரணம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி இருக்கின்றன. கோயம்புத்தூர் நரசீபுரம் பகுதியில் உள்ள கலைமகள் கல்லூரியில் நேற்று நடைபெற்ற தேசிய பேரிடர் மீட்பு பயிற்சியில் மாணவி உயிரிழந்தார். மாணவி லோகேஸ்வரியின் இறுதி நிமிடங்களை சொல்லும் அந்த வீடியோ காட்சிகள் பதற வைப்பதாக இருக்கின்றன.
இந்தப் பயிற்சியில் அதே கல்லூரியில் பி.பி.ஏ. 2 ஆம் ஆண்டு படிக்கும் மாணவி லோகேஸ்வரி கலந்து கொண்டார். ஆர்வத்தினால் முதலில் இந்தப் பயிற்சியில் ஈடுபட சென்ற மாணவி, பின்பு பயத்தினால் பின் வாங்கினார். இருந்த போதும் அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்குத் தைரியம் கொடுத்து அவரை பயிற்சியில் ஈடுபட வைத்தனர்.
கோவை மாணவி லோகேஸ்வரி இறுதி நிமிடங்கள் :
இந்நிலையில் தான், மாணவி லோகேஸ்வரி 2 ஆம் தளத்தில் இருந்து கீழே குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டார். இந்தப் பயிற்சியில் கீழே வலை கட்டி மாணவர்கள் பிடிக்க அவர், எந்த வித உபகரணங்களின் உதவியும் இன்றி கீழே உள்ள வலையில் விழ வேண்டும். இதை முறைப்படி லோகேஸ்வரியை செய்ய வைக்கப் பேரிடர் மீட்பு பயிற்சியாளர் அவருடன் இருந்தார்.
அப்போது தான் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்தது. தளத்தில் அமர்ந்திருந்த மாணவி லோகேஸ்வரி முதலில் கீழே விழும் உயரத்தைக் கண்டு பயந்தார். ஆனால் அவரது மறுப்பையும் மீறி கீழே குதிக்கும்படி வற்புறுத்தினார் பயிற்சியாளர் ஆறுமுகம். ஒரு கட்டத்தில் மாணவி லோகேஸ்வரி குதிக்க மறுக்க அவரைப் பின்னால் இருந்து பொத்தேன்று தள்ளி விடுகிறார் பயிற்சியாளர் ஆறுமுகம்.
இதனால் மாணவி நிலை தடுமாறி முதல் தளத்தில் பலமாக இடித்துக் கொண்டு கீழே உள்ள வலையில் விழுந்தார். இதனால் தலையில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனை செல்லும் வழியிலே உயிரிழந்தார். நெஞ்சை பதபதைக்கும் இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாணவி லோகேஸ்வரி மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை To Read, Click Here
லோகேஸ்வரி: பேரிடர் மீட்பு பயிற்சியில் அநியாயமாக கொல்லப்பட்ட கோவை மாணவி! To Read Click Here
25 வினாடி நீடிக்கும் இந்த வீடியோவின் தொடக்கத்தில், 2வது தளத்தில் உள்ள சன் ஷேடில் உட்காரும் மாணவி, கீழே பார்க்கிறார். 3வது வினாடியில் குதிக்க தயாராகிறார். 4வது வினாடியில் மாணவியைத் தடுத்துவிட்டு, கீழே வலையை விரித்திருப்பவர்களை முன்னால் வரச் சொல்கிறார் பயிற்சியாளர் ஆறுமுகம். பிறகு 10வது வினாடியில் இருந்து கீழே குதிக்கத் தயங்குகிறார் லோகேஸ்வரி.
அதன் பின்பு, மாணவி எதிர்பார்க்காத நேரத்தில் சரியாக 16 ஆவது நொடி லோகேஸ்வரியை மேலிருந்து கீழே தள்ளி விடுகிறார் பயிற்சியாளர் ஆறுமுகம். அடுத்த கணமே மாணவி முதல் தளத்தில் இடிபட்டு கீழே விழுகிறார். ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவியை உடனே அனைவரும் மருத்துவமைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே அவரின் உயிர் பிரிந்தது.
கோவை மாணவி லோகேஸ்வரி தள்ளி விடப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிறது. பலரும் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.