Weather Chennai News: தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை கொட்டுகிறது. நாளையும் சில மாவட்டங்களில் கன மழை காத்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பெய்திருக்கிறது.
Latest Report: அடுத்த 2 நாட்கள் கன மழை பெய்யும் மாவட்டங்கள் இவைதான்
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 17) பகல் 12 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கை வருமாறு:
கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை
Chennai Weather Forecast: வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கன மழை வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் கன மழை பெய்யும். நாளை முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாட்டில் குறிப்பிட்ட பகுதிகளில் கன மழை பெய்ய இருக்கிறது.
நவம்பர் 19, 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய இருக்கிறது. சென்னையில் பெரும்பாலும் வானம் மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலை அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 17 செ.மீ மழை பெய்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 7 செ.மீ மழையும், நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 6 செ.மீ, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், மணிமுத்தாறு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.
தனியார் வானிலை ஆய்வாளரும் தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படுபவருமான பிரதீப் ஜான் கூறுகையில், ‘தென் மாவட்டங்களிலும், நீலகிரி குன்னூரிலும் கன மழை பெய்திருக்கிறது. சென்னை, டெல்டா மாவட்டங்களுக்கு இன்று மழை இருக்கிறது’ என குறிப்பிட்டிருக்கிறார்.