Weather Chennai News Today Tamil Nadu Weather Forecast- வானிலை அறிக்கை
Chennai Weather Forecast: சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (டிசம்பர் 29 ) பகல் 12 மணிக்கு தெரிவித்த தகவல்கள் வருமாறு:
Advertisment
லட்சத் தீவு மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். ஜனவரி 2-ம் தேதி வரை இந்த நிலை நீடிக்க வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் எந்த மாவட்டங்களுக்கும் முன்னெச்சரிக்கை அபாயம் விடுக்கப்பப்டவில்லை.
Advertisment
Advertisements
அடுத்த ஐந்து நாட்களுக்கு சென்னை மற்றும் புதுவையில் ஆங்காங்கே, சில இடங்களில் மட்டும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கபப்டுள்ளது.
Weather News Today: இன்றைய வானிலை
அடுத்த 48 மணி நேரத்தில் சென்னையில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வெப்ப நிலை அதிகபட்சம் 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பதிவாகவில்லை.