/indian-express-tamil/media/media_files/2024/11/09/AGcd7P6FFYooYBTPPkJH.jpg)
குழந்தை சத்தாக வளர உணவில் இந்த பழக்கத்தை கொண்டு வாருங்கள்
சில பெற்றோர்களின் பெரும் கவலையே தன் குழந்தை என்ன சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்கவே இல்லை. எப்போதுமே ஒல்லியாவே இருக்கின்றது, என்ன செய்வது என்று கூறுவார்கள். அப்படி சரியாக சாப்பிடாத ஒல்லியாக இருக்கும் குழந்தைகள் சாப்பிட இதுமாதிரியான உணவுகளை செய்து கொடுங்கள்.
குழந்தைக்கு முதல் 6 மாதம் தாய்ப்பால் தான் சிறந்த உணவு. எனவே குழந்தைக்கு தாய் பால் போதுமானது. 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கு மெதுவாக சத்து மாவு கஞ்சியில் இருந்து உணவு பழக்கத்தை ஆரம்பிக்கலாம்.
குழந்தைகளுக்கு முதலில் கேழ்வரகு, நேந்திர பழம் ஆகியவற்றை கொண்டு கஞ்சி செய்து கொடுக்கலாம். கஞ்சியில் சுவைக்கு சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொடுக்கலாம். தொடர்ந்து ஒரே மாதிரி கஞ்சி கொடுக்காமல். குழந்தைக்கு பார்த்ததும் கவரும் படி வண்ணம் சேர்த்து கொடுக்கலாம்.
உதாரணத்திற்கு பீட்ரூட் சாறு எடுத்து கஞ்சியில் சிறிது சேர்த்து பிங்க் நிறத்தில் கொடுக்கலாம். கஞ்சி ஊட்ட பயன்படும் கப் பொம்மை போட்ட மாதிரி கலர் கலராக இருக்கலாம்.
மேலும் நார்ச்சத்து அதிகம் இல்லாத கஞ்சிகள் கொடுக்கலாம். பின்னர் சத்துமாவு கஞ்சுகள் கொடுக்கலாம். அதிலும் அதிக புரதம் நிறைந்த உணவுகள் சமைத்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு பருப்பு சாதம் அவ்வப்போது குழைய செய்து நெய் விட்டு கொடுக்கலாம்.
2 மூன்று வயதானதும் இதே சத்து மாவில் விதவிதமான உணவு செய்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு சத்து மாவில் இட்லி, தோசை, கொழுக்கட்டை மற்றும் இனிப்பு பலகாரம் செய்து கொடுக்கலாம்.
நிலக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே நிலக்கடலையில் மிட்டாய் செய்து கொடுக்கலாம்.
கம்பு உருண்டை, புட்டு, தோசை போன்றவை செய்து கொடுக்கலாம் .தினமும் ஒரே மாதிரி உணவு கொடுக்காமல். அதே உணவில் சிறிது மாற்றம் செய்து கொடுத்தால் குழந்தைகள் எளிதில் சாப்பிட்டுவிடும்.
அதேபோல தினசரி ஒரு வாழைப்பழம் கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுப்பதும் நல்ல ஊட்டச்சத்து நிறைந்தது.
குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகள் மட்டும் ஆரோக்கியத்தை கொடுக்காது. உணவிலும் சில மாற்றங்கள் கட்டாயம் தேவை என்கிறார் மருத்துவர் சிவராமன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.