இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தனுஷ்கோடிக்கு வந்த மேற்கு வங்க இளைஞரை கடலோர பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரத்திற்கு வந்து சுற்றித் திரிந்த, 41 வயது மதிக்கத்தக்க நபரை ராமேஸ்வரம் கடலோரப் பாதுகாப்பு படையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
இதையும் படியுங்கள்: குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழ் இனத்துக்கு எதிரானது – உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க வாதம்
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளியில் உள்ள பாண்டுவாவைச் சேர்ந்த எஸ்.ஹொசைன் செய்க் ராகியால் என அடையாளம் காணப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ஹொசைனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் பொற்கொல்லராகப் பல வருடங்களாகப் பணிபுரிந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. வேலைக்கான விசா காலாவதியாகிவிட்டதால், அவர் இலங்கையில் இருந்து, மேற்கு வங்கத்தில் உள்ள தனது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பியுள்ளார். எனவே, செவ்வாய்கிழமை இரவு 7.30 மணியளவில் தலைமன்னாரில் இருந்து புறப்பட்ட படகில் சட்டவிரோதமாக ஏறி, தனுஷ்கோடி அருகே ரகசியமாக வந்தடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil