Advertisment

புயல் எச்சரிக்கை கூண்டு எண்களை கொண்டு அபாயத்தை எப்படி கண்டறிவது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
today chennai weather

today chennai weather : 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

Cyclone Warning Signals meaning  : புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன என்ற சந்தேகம் இந்த கஜ பற்றிய புதிய புதிய அப்டேட்கள் வரும்போது உருவாகி வந்தன. கஜ புயலின் காரணமாக கிழக்கு கடற்கரையோரமாக இருக்கும் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டன. தற்போது ஃபனி புயலும் உருவாகியுள்ளது.

Advertisment

கஜவின் போது நாகை மாவட்டத்தில் 40 ஆண்டுகள் கழித்து 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன ? அந்த எண்கள் கூற விரும்பும் செய்திகள் என்ன என்பதை விளக்குகிறது இந்த பதிவு.

பொதுவாக புயல் காலங்களில் 1 முதல் 11 வரை புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்படும். பகல் நேரங்களில் மூங்கில் தட்டைகளால் ஆன கூண்டுகள் ஏற்றப்படுவது வழக்கம். இரவு நேரங்களில் வண்ண ஒளி விளக்குகளால் ஆன புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றுவார்கள்.

Cyclone Warning Signals meaning  : புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன?

1ம் எண் எச்சரிக்கை கூண்டு - புயல் உருவாகக் கூடிய வானிலை சூழல் உருவாகியுள்ளது. பலமான காற்று வீசுகிறது. ஆனால் துறைமுகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அர்த்தம்.

2ம் எண் எச்சரிக்கை கூண்டு - புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிப்பதிற்காக ஏற்றப்படுவது தான் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு. இதனைத் தொடர்ந்து துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வெளியேற்ற வேண்டும் என்பதை தெரிவிக்க ஏற்றப்படுகிறது.

3ம் எண் எச்சரிக்கை கூண்டு - திடீர் காற்று மற்றும் மழை உருவாகக் கூடிய சூழல் நிலவுகையில் 3ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும்.

துறைமுகத்தில் மோசமான வானிலை ஏற்பட்டிருந்தால் அதனை அறிவிக்கும் வகையில் 4ம் எச்சரிக்கை எண் விடப்படும். துறைமுகத்தில் இருக்கும் கப்பல்களுக்கு ஆபத்து என்பதை தெரியப்படுத்த இது உதவும்.

5ம் எண் எச்சரிக்கை கூண்டு : உருவான புயல் துறை முகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை எச்சரிக்கை செய்ய இந்த கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

6ம் எண் எச்சரிக்கை கூண்டு : துறை முகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்பதை தெரிவிக்க இந்த கூண்டு ஏற்றப்படுகிறது.

7ம் எண் எச்சரிக்கை கூண்டு : இந்த கூண்டு ஏற்றப்பட்டால் துறைமுகங்கள் வழியாகவோ அல்லது அதற்கு மிக அருகிலோ புயல் கரையைக் கடக்கும் என்பதை அறிவிக்க ஏற்றப்படுகிறது.

8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால் அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் இடது பக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்

9ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு : இந்த எண் அறிவிக்கப்பட்டால் அபாயம் மிக்க புயல் துறைமுகத்தின் வலது பக்கமாக கரையைக் கடக்கும் என்று அர்த்தம்

10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு : அதி தீவிர புயல் உருவாகியிருக்கும் பட்சத்தில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படும். துறைமுகத்தின் வழியாகவோ அதன் அருகிலோ இது கரையைக் கடக்கும் என்பதை வெளிப்படுத்த இது உதவும்.

11ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு : வானிலை எச்சரிக்கை மையத்துடனான தகவல் முற்றிலுமாகத் துண்டிக்கப்படும் நிலையில் இந்த புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்.

மேலும் படிக்க : ஃபனி புயல் பற்றிய லைவ் அப்டேட்டிஸை பெற்றிட!

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment