scorecardresearch

ரஜினி அரசியல் பிரவேசம்… சாமானியர்கள் யோசிப்பது என்னவோ?

ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தைக் கிளப்பியுள்ளது இந்த அறிவிப்பு. ஆனால் மற்ற கட்சியினர் மற்றும் வெகுஜன மக்களின் பார்வையில் இந்த அறிவிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். 

ரஜினி அரசியல் பிரவேசம்… சாமானியர்கள் யோசிப்பது என்னவோ?

1996ம் ஆண்டில் இருந்து ரஜினி தான்  அரசியலுக்கு வர இருப்பதாக கூறிக் கொண்டே இருந்தார். ஆனால் கட்சியின் பெயர் குறித்தோ அதன் கொள்கைகள் குறித்தோ, தேர்தலில் போட்டியிடுவாரோ என்பது குறித்தோ எந்த தகவலும் இருந்ததில்லை. ஆனால் 2017ம் ஆண்டுக்கு பிறகு தீவிரமாக அரசியல் குறித்து தன்னுடைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வந்தார்.  அவ்வபோது நடைபெறும் ஆலோசனை கூட்டங்களும், கருத்துகளும் தலைப்பு செய்தியாக மாற, கட்சி எப்போது துவங்குவார் என்பது மர்மமாகவே இருந்தது. இந்நிலையில் இன்று 2021ம் ஆண்டு ஜனவரியில் கட்சி துவங்கப்படும். அதற்கான தேதி டிசம்பர் 31ம்  தேதி அறிவிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க : ”ஜனவரியில் கட்சி; ஆன்மிக அரசியல் அமைவது நிச்சயம்” – ரஜினிகாந்த் உறுதி

ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தைக் கிளப்பியுள்ளது இந்த அறிவிப்பு. ஆனால் மற்ற கட்சியினர் மற்றும் வெகுஜன மக்களின் பார்வையில் இந்த அறிவிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

விசிக

அறிவிப்பை வரவேற்கின்றேன். எந்த நிர்பந்தத்தின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியும். அவர் உடல் நலம் குறித்து வருத்தம் அடைகிறேன். ரஜினியின் அறிவிப்பு பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கு ஆபத்து என்று வி.சி.க. எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார். ஆனால் பெரிய தாக்கத்தை தராது. தேமுதிக ஆரம்ப காலத்தில் பெற்ற வாக்குகளை பெற்றால் அதுவே சாதனை என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் – சினேகன் 

வரவேற்கின்றோம். நாட்டின் மக்கள் மீது அக்கறை கொண்டவர். ரசிகர்களுக்கான மகிழ்ச்சியாகவே இதை பார்க்கின்றேன். வரட்டும் நல்ல மாற்றத்தை தரட்டும் என்று சினேகன் கூறியுள்ளார்.

அவர் அரசியலுக்கு வரவிரும்பவில்லை என்று நினைத்திருந்தேன் – நடிகை கஸ்தூரி

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: What politicians common men netizens think about rajinikanth announcement

Best of Express