Advertisment

கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு மீது குற்றம் சொல்ல முகாந்திரம் இல்லை என அரசு தரப்பு வக்கீல் வாதம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
stalin cry, Karunanidhi Burial Place

Karunanidhi Burial Place: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை இயற்கை எய்தினார். திராவிட பெருந்தலைவரான அவர் உடலை அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று குடும்பத்தினர் அனைவரும் சென்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு கொடுத்தனர்.

இது குறித்து நேற்று மாலை தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அளித்த அறிக்கையில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளின் காரணமாக மெரினா கடற்கரைப் பகுதியில் இடம் ஒதுக்க இயலாது என்று சொன்னார்.

இதனை தொடர்ந்து கருணாநிதிக்கு, அண்ணா சமாதி அருகே இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்றத்தை நாடியது திமுக.

anna ninividam, Karunanidhi Burial Place திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட உள்ள அண்ணா நினைவிடம்.

இந்த வழக்கு நள்ளிரவில் விசாரிக்கப்பட்டு, அரசுத் தரப்பு பதிலுக்காக இன்று (ஆகஸ்ட் 8) காலை 8.30 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து நேற்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் திமுக முன்வைத்த கோரிக்கையையே வலியுறுத்தினர்.

இதையடுத்து இன்று காலை 9.30 அளவில், அரசு மற்றும் திமுக சார்பில் வாதம் தொடங்கியது. இந்த நிலையில், மெரினாவில் சமாதி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்குகளை வழக்கு பதிவிட்ட அனைவரும் வாபஸ் பெற்றனர்.

KARUNANIDHI FUNERAL LIVE UPDATES

மனுதாரர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் விடுதலை, பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, சண்முக சுந்தரம் உள்ளிட்ட வழக்கறிஞர் ஆஜராகின்றனர். வழக்கறிஞர் துரைச்சாமி, மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி ஆகியோர் ஆஜராகினார்.

தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைதியநாதன், தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள் அரவிந்த பாண்டியன், ராஜகோபால், அரசு பிளிடர் ராஜகோபால் ஆஜராக உள்ளனர். காலை 9.45 மணிக்கு நீதிபதிகள் வந்தனர். வழக்கறிஞர்கள் விவாதம் தொடங்கியது. அதன் விபரம் வருமாறு.

10.45 AM : திமுக தலைவர் கருணாநிதியின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு விபரத்தை கருணாநிதி உடல் அருகே நின்று கொண்டிருந்த ஸ்டாலினிடம் சொன்ன போது, வெடித்து அழுதார். அவரை துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் சமாதானப்படுத்தினர்.

10.40 AM : அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றது. நீதிபதிகள் தீர்ப்பை எழுதி வருகின்றனர்.

10.37 AM : வில்சன் : இது போன்ற நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளேம். மெரினாவில் கருணாநிதி உடலை புதைக்க சட்டரீதியாக என்ன தடை உள்ளது என்பதற்கு அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை

10.36 AM : வைத்தியநாதன் :- என் மீதான தனிபட்ட தாக்குதல் வைக்கிறார். அனுமதிக்க முடியாது.

10.35 AM : வில்சன் :- பழிவாங்கும் நோக்குடன் வாதங்களை முன்வைக்கிறார். காமராஜரை பின்பற்றுபவர்கள் மத்தியில் கருணாநிதி குறித்து தவறான எண்ணத்தை ஏற்படுத்த பழிவாங்கும் நோக்கத்துடன் வாதிடுகிறார், அரசுத்தரப்பு வழக்கறிஞர்.

10.33 AM : சி.எஸ்.வைத்தியநாதன் :- பத்திரிக்கை செய்தியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் ஏன் மத்திய அரசு உத்தரவுகளை ஏன் குறிப்பிட்ட வில்லை. உணர்வுகளுக்கு (சென்டிமென்ட்) என எந்த உத்தரவுகைளையும் நீதிமன்றம் பிறப்பிக்க கூடாது சட்டத்தின் படி தான் இருக்க வேண்டும். உணர்வுகள் அடிப்படையில் வழக்கும் தெடரமுடியாது. தமிழக அரசு அனைத்து மரணங்களுக்கும் உரிய மரியாதை அளிக்கிறது. இந்த வழக்கு எந்த விதத்திலும் விசாரணைக்கு உகந்து அல்ல வழக்கை ஏற்க கூடாது.

10.32 AM : நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர்:- நீங்கள் எதை வெளியிட்டீர்களோ அதைத்தான் எதிர்த்து வழக்கு தொட்ர்கிறார்கள். அதில் தவறென்ன உள்ளது.

தேசிய அரசியலில் கருணாநிதியின் பங்களிப்பு

10.30 AM : சி.எஸ்.வைத்தியநாதன்: ஜான்கி அம்மாள் இறந்தபோது எம்.ஜி.ஆர். சமாதி அருகில் இடமளிக்க முடியாது என கருணாநிதி சொந்த கையெழுத்தில் எழுதிய உத்தரவு உள்ளது. கிண்டியில் கலைஞர் அடக்கம் செய்யப்பட்டால் அது கண்ணியமான அடக்கமாக இருக்க முடியாது என திமுக கூறியதன் மூலம் அங்கு அடக்கம் செய்யப்பட்ட பிற தலைவர்களை திமுக அவமதித்துள்ளனர். கண்ணியமான அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. காங். தலைவர்கள் சமாதிகள் உள்ள அந்த பகுதியில் அடக்கம்செய்வது கண்ணியமற்றது என்பது அந்த தலைவர்களை அவமதிப்பதற்கு சமம். உடலை அடக்கம் செய்ய நிலம் ஒதுக்கும் படி யாரும் உரிமை கோர முடியாது. முன்னாள் முதல்வர்கள் எப்படி நடத்த படவேண்டும் என தெரிவித்தவர் கருணாநிதி. தற்போது அவரின் கருத்துக்கு எதிராக கோரிக்கு வழக்கும் உள்ளது. அரசியலமைப்பு படி அனைவரும் அளிக்கபட வேண்டிய உரிமையும் கவுரவத்தையும் அரசு வழங்குகிறது. தற்போது பத்திரிக்கை செய்தியை வைத்து மட்டுமே இந்த வழக்கு தொடரபட்டுள்ளது. இதற்கான எந்த விதமான உத்தரவும் மனுதரார் தாக்கல் செய்யவில்லை அரசு.

10.28 AM : திமுக மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் : காமராஜரை காங்கிரஸ் அலுவலகத்தில் அடக்கம் செய்யத்தான் முடிவெடுத்தார்கள். மெரினாவில் உரிமை கோரவில்லை.

10.27 AM : சி.எஸ்.வைத்தியநாதன்: இல்லை அவர் இறந்தபோது கோரிக்கை வைத்தார்கள்.

10.26 AM : நீதிபதிகள் : காமராசருக்கு மெரினாவில் இடம் வழங்க வேண்டும் என யாரும் கோரிக்கை வைக்கவில்லை.

10.25 AM : மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைதியநாதன் வாதத்தைத் தொடங்கினார். முன்னாள் முதல்வர் ஜானகி இறந்த போது மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி கோரப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி வழங்க முடியாது என கருணாநிதி தன் கையப்பட உத்தர பிறப்பித்தார். திராவிட இயக்கத்தின் மிகஒபெரும் தலைவரான பெரியாரின் நினைவிடம் மெரினாவில் உள்ளதா?

10.20 AM : Decent burial என்பதை அனுமதிக்க வேண்டும்.Decent burialக்கான அனைத்து உரிமைகள் உள்ளது. அறிஞர் அண்ணாவின் கொள்கையை பின்பற்றியவர் கலைஞர். இருவரின் கொள்கை ஒன்றே. அதனால்தான் அங்கு இடம் கேட்கிறோம். அண்ண மாயண பகுதியாக சென்னை மாநகராட்சி அறிவிக்க பட்டுள்ளது. CRZல் கட்டிடம் எழுப்பதான் அரசு அனுமதி வேண்டும். ஆனால் நாங்கள் அடக்கம் செய்ய மட்டுமே நாங்கள் கோர்க்கை வைக்கிறோம். மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை யாருக்கு ஒதுக்க வேண்டும் என மத்திய அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை. முதல்வர்களுக்கு மெரினாவிலும், முன்னாள் முதல்வர்களுக்கு கிண்டியிலும் சமாதி அமைக்கலாம் என அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவே இல்லை. தமிழகத்தில் 3 கோடி திமுகவினரின் எண்ணம் அவர்களின் கோரிக்கை மெரீனாவில் கருணாநிதிக்கு இடம் வழங்க வேண்டும் என்பது இது அவர்களின் உணர்வும் ஆகும். மத்திய அரசின் விதிமுறைகள் சமாதி அமைக்கும் இடங்களுக்கு பொருந்தாது. அண்ணாவின் அன்புற்குரிய கலைஞர் அண்ணா சமாதி வளாகத்தில் அடக்கம் செய்யவில்லை என்றால் அது கண்ணியமான அடக்கமாக இருக்காது

10.17 AM : நீதிபதிகள் :- ஆம்... ஆம்... decent burial enpathil ஆட்சேபனை இல்லை.

10.15 AM : வில்சன் :- ராஜாஜி, காமராஜர் ideology என்பது வேறு. திராவிட இயக்கத்தினர் ஐடியாலஜி வேறு. சுய மரியாதை கொள்கைகளுக்காக போராடிய இயக்கம். பெரியார் அண்ணா வழியில் போராடியவர். 1972 திமுக-விலிருந்து பிரிந்து எம்.ஜி.அர்ர். அதிமுக வை உருவாக்கினார். தனி இயக்கம் தொடங்கினாலும் பெரியார், அண்ணாவின் சித்தாந்ததை பின்பற்றியதால்தான் அண்ணா அருகில் அடக்கம் செய்யப்பட்டார். மாற்று சித்தாந்தம் உள்ளவர்கள் இடையே அடக்கம் செய்யுங்க என்பதை முடியாது. எனவே அரசியலமைப்பு சட்டம் 21 வழங்கிய அதிகாரம் தமிழக அரசு மீறியுள்ளது.

10.10 AM : நீதிபதிகள் :- மனு கொடுத்தது, நிராகரித்தது, 5 முறை முதல்வர் என அனைத்தையும் அறிவோம். அனுமதி வழங்க என்ன இடைஞ்சல் (impediment) என அரசிடம் கேட்டோம். அதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கவில்லை. அதுதொடர்பாக வாதிடுங்கள்.

10.05 AM : திமுக தரப்பில் வக்கீல் வில்சன் வாதம் செய்து வருகிறார். அவர் வாதத்தின் போது, ‘‘காந்தி மண்டபம் என்பது காங்கிரஸ் தலைவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம். அரசு பாரபட்சம் காட்டுகிறது. அதற்கும் திராவிட கொள்கைகளுக்கும் மாறுபாடு உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட கொள்கைகளுக்கும் வேறு பாடு உள்ளது. எனவே தான் காந்தி மண்டபம் வேண்டாம் என்கின்றோம். எனவே தான் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அண்ணா சதுக்கத்தில் அடக்கம் செய்யபட்டனர்.உணர்வுகளுக்கு மதிப்பளித்து இடம் வழங்க வேண்டும்’’ என வாதிடப்பட்டது.

10.00 AM : அரசின் உத்தரவை அல்லாமல் பத்திரிகை செய்தி குறிப்பை எதிர்த்து வழக்கு தொடர முடியாது. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தை வழக்கில் இணைக்க வில்லை என பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

9.55 AM : பா.ம.க. சட்டத்துறை செயலாளர் கே.பாலு, மெரினாவில் கல்லறை அமைப்பது தொடர்பாக தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறுவதாக அறிவித்தார். நீதிபதிகளும் அதை ஏற்றுக் கொண்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

9.50 AM : மூன்று மனுக்களை வாபஸ் பெற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டு அந்த மனுக்களை தள்ளுபடி செய்தனர். 3 மனுகளும் ஜெயலலிதா நினைவிடத்தை கட்டவும் அங்கிருந்து அகற்றவும் தடை கேட்ட வழக்குகள் ஆகும்.

9.45 AM : வழக்கறிஞர் துரைசாமி, ‘நான் தொடர்ந்த வழக்குகளை வாபஸ் பெறுகிறேன்’ என்று தெரிவித்தார். அதே போல டிராபிக் ராமசாமியின் வக்கீல், ‘நாங்கள் ஏற்கனவே தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுகிறோம். புதிய மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கேட்டனர்.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment