மேகதாது அணை தொடர்பாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்... நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைப்பு

ரபேல் தொடர்பாகவும் தொடர் அமளி ஏற்பட்டதால் அவைகள் ஒத்திவைப்பு.

குளிர்கால கூட்டத் தொடர் 2018 : மேகதாது விவகாரம் : காவேரி நதியின் குறுக்கே இரட்டைத் தடுப்பணைகளை கட்டுவதற்கு கர்நாடக மாநிலம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் அந்த திட்டத்திற்கான வரைவினை மத்திய அரசிடம் கர்நாடக அரசு சமர்பிக்க, அதற்கு ஒப்புதலும் வழங்கியது மத்திய அரசு.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தில் எதிர்கட்சிகள் சார்பில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. பின்பு திருச்சியில் அனைத்து கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

குளிர்கால கூட்டத் தொடர் 2018 : மேகதாது விவகாரம் – அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர்

இந்நிலையில் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. இன்று காலை முதலே மேகதாது அணை தொடர்பான கேள்விகளை எழுப்பி மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர் அதிமுக எம்.பிகள். தொடர் அமளியின் காரணமாக மதியம் வரை அவை மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

மதியத்திற்கு பிறகு மீண்டும் நாடாளுமன்றத்தில் அதிமுகவினர் மேகதாது பிரச்சனை குறித்து பேசினார்கள். எதிர்கட்சிகள் ரபேல் போர் விமானம் தொடர்பான குற்றச்சாட்டுகளை முன் வைத்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். தொடர் அமளியின் விளைவாக நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாநிலங்கள் அவையிலும் இந்த இரண்டு பிரச்சனைகள் குறித்த விவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் மேலவையும் இன்று நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க : ரபேல் தொடர்பான CAG அறிக்கையை யாராவது கண்டறிந்தால் சொல்லவும் – காங்கிரஸ்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close