150 FTA channels for Rs 130 NCF : அனைத்திந்திய டிஜிட்டல் கேபிள் சங்கம் (All India Digital Cable Federation (AIDCF)) சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில், என்.சி.எஃப். கட்டணம் மூலமாக பெறப்பட்ட சேனல்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் எனப்படும் ரூ.130-ஐ கட்டணத்தை செலுத்திய பிறகு 100 சேனல்களை பார்த்துக் கொள்வது போன்ற ஒரு செட்-அப் முன்பு இருந்தது. ஆனால் தற்போது அதிக வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அந்த சேனல்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரித்து அறிவித்துள்ளது டிஜிட்டல் கேபிள் டிவி சங்கம்.
ரூ. 130 + 18% ஜி.எஸ்.டி (ரூ.23) கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை இருந்தது. ரூ.153க்கு 100 சேனல்கள். ஆனால் தற்போது 150 எஸ்.டி. சேனல்களை பெற்றுக் கொள்ளலாம். அதே போன்று இலவசமாக ஒளிபரப்பப்படும் சேனல்களின் எண்ணிக்கையும் 100-ல் இருந்து 150-ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. 100 சேனல்களுக்கு மேல் சேனல்களை பெற விரும்புவர்களுக்கு ஒவ்வொரு 25 சேனலுக்கும் ரூ.20 மாத கட்டணமாக முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது, மேலும் இலவச சேனல்கள் அனைத்தும் எஸ்.டி. தரத்தில் தான் இருக்குமே தவிர எச்.டி. தரத்தில் இருக்காது.
இவை அனைத்தும் கேபிள் டிவி பயனாளிகளுக்கு மட்டும் தான். டி.டி.எச் சேவையில் நீண்ட கால பயன்பாட்டிற்காக வழங்கப்படும் சேவைகளில் சில தள்ளுபடிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க : 35 நிமிடத்தில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியுமா? சவாலை சந்தித்த ரியல்மீ X2 ப்ரோ!