Advertisment

35 நிமிடத்தில் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய முடியுமா? சவாலை சந்தித்த ரியல்மீ X2 ப்ரோ!

Realme X2 Pro launch : அறிமுகத் தேதி குறித்த முறையான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.

author-image
WebDesk
Oct 04, 2019 16:59 IST
Realme X2 Pro supports SuperVOOC flash charge

Realme X2 Pro supports SuperVOOC flash charge

Realme X2 Pro supports SuperVOOC flash charge : சமீபத்தில் ரியல்மீ நிறுவனத்தின் எக்ஸ்2 வெளியான நிலையத்தில் அதன் ப்ரோ மாடல் தற்போது வெளியாக இருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல்கள் வெளியாகின.

Advertisment

தற்போது ரியல்மீ எக்ஸ்2 ப்ரோ ஐரோப்ப இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் இடம் பெறும் சிறப்பம்சங்களாக சில விசயங்களை அந்த இணையம் வெளியிட்டுள்ளது. குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855 ப்ரோசசர் இதில் பொறுத்தப்பட்டுள்ளாது. இதன் டிஸ்பிளே ரிஃப்ரஷ் ரேட் 90 ஹெர்ட்ஸ் ஆகும்.இந்த ஸ்மார்ட்போனின் சார்ஜர் 50 வாட்ஸ் சூப்பர்வூக் ஃப்ளாஷ் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால் வெறும் 35 நிமிடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்துவிடும்.

Realme X2 Pro specifications

ரியல்மீ எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன், இதன் முந்தைய வேரியண்ட்டான எக்ஸ்2-வைப் போலவே 64 எம்.பி. பிரைமரி லென்ஸை கொண்டுள்ளது. மேலும் 115 டிகிரி கேப்சரை தரும் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸையும், டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் போர்ட்ரைட் லென்ஸையும் இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது. மேலும் 20 மடங்கு அதிகமான ஹைப்ரிட் ஜூமையும் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மேலும் படிக்க : அக்டோபர் 20ம் தேதி முதல் சாம்சங் ஃபோல்டின் விற்பனை ஆரம்பம்!

60 ஹெர்ட்ஸ் டிஸ்பிளேவுக்கு மாற்றிக் கொள்வதற்கான செட்டிங்குகளையும் பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன். இதில் கிராஃபிக்ஸ் ப்ரோசசர் அட்ரெனோ 640 பொறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதி, மற்றும் இந்திய வெளியீடு குறித்த எந்த தகவல்களும் இன்னும் முறையாக அறிவிக்கப்படவில்லை.

#Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment