Advertisment

அக்டோபர் 20ம் தேதி முதல் சாம்சங் ஃபோல்டின் விற்பனை ஆரம்பம்!

இந்த போன்களுக்காகவே 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
samsung foldable phone, Samsung Galaxy F foldable Phone, Samsung Galaxy Fold launch date announced

samsung foldable phone, Samsung Galaxy F foldable Phone

Samsung Galaxy Fold Pre-Order started :உலகின் முதல் ஃபோல்டபிள் போனான சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் தற்போது இந்தியா முழுவதும் 35 நகரங்களில், 312 ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ-ஆர்டர் துவங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 20ம் தேதியில் இருந்து விற்பனை ஆரம்பமாகிறது.

Advertisment

12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 999-க்குவிற்பனை செய்யப்படுகிறது.  ப்ரீமியம் காஸ்மாஸ் கறுப்பு நிறத்தில் இந்த போன் கிடைக்கிறது. இந்த போனுடன் சாம்சங் கேலக்ஸி பட்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இந்த போன்களுக்காகவே 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Fold சிறப்பம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனை இரண்டாக மடிக்கும் போது 4.6 இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். முழு வடிவமைப்பில் 7.3 இன்ச் அளவை கொண்டிருக்கும்.

குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 855வை கொண்டுள்ளது.

12ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி ஸ்டோரேஜை பெற்றுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

கிராஃபிக்ஸ் ப்ரோசசர் அட்ரெனோ 640 ஜிபியூ பயன்படுத்தப்பட்டுள்ளாது.

ஆண்ட்ராய்ட் 9.0 இயங்குதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.

பேட்டரி திறன் 4380mAh ஆகும்.

மேலும் படிக்க : இனி எல்லாம் ஒன்ப்ளஸ் மயமே… இந்திய சந்தையில் வலுவான இடம் பிடித்த ப்ரீயம் ஸ்மார்ட்போன் நிறுவனம்

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment