ஆப்பிளுடன் கை கோர்க்கும் சாம்சங் நிறுவனம்... காரணம் என்ன?

ஒ.எல்.ஈ.டி திரை பயன்பாட்டிற்கு வந்தால், டெம்பார் க்ளாஸ் பயன்படுத்த வேண்டியது இல்லை என்படது கூடுதல் தகவல்.

ஒ.எல்.ஈ.டி திரை பயன்பாட்டிற்கு வந்தால், டெம்பார் க்ளாஸ் பயன்படுத்த வேண்டியது இல்லை என்படது கூடுதல் தகவல்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
16-inch MacBook Pro Features Samsung OLED Display

16-inch MacBook Pro Features Samsung OLED Display

16-inch MacBook Pro Features Samsung OLED Display : ஆப்பிள் வெளியிட இருக்கும் 16 இன்ச் மேக்புக் மற்றும் ஐபேட் ப்ரோ மாடல்களில் சாம்சங் நிறுவனத்தின் ஓ.எல்.இ.டி திரை பயன்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisment

புதிதாக வெளியாக இருக்கும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மற்றும் தற்போது உபயோகத்தில் இருக்கும் 11 இன்ச் ஐபேட் ப்ரோவும் எல்.சி.டி திரைகளுக்கு பதிலாக ஓ.எல்.இ.டி திரைகளை பெற உள்ளதாக கொரியாவின் தி எலெக் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் தயாரித்துள்ள மெல்லிய ஃபிலிமுடன் கூடிய ஓ.எல்.இ.டி திரைகளை ஆப்பிள் நிறுவனங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அந்த இணையத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒ.எல்.ஈ.டி திரை பயன்பாட்டிற்கு வந்தால், டெம்பார் க்ளாஸ் பயன்படுத்த வேண்டியது இல்லை என்படது கூடுதல் தகவல்.

ஆப்பிள் அனலிஸ்ட் கருத்து

ஆப்பிள் அனலிஸ்ட்டான மிங் சி கௌ அளித்துள்ள தகவலின் படி, ஆப்பிள் நிறுவனம் புதிய வகை திரைகளை பயன்படுத்த திட்டமிட்டிருப்பது என்னவோ உண்மை தான். ஆனால் இந்த வருடத்தில் ஓ.எல்.இ.டி அப்டேட்டுடன் மேக்புக் வருவதைப் பற்றி எந்த தகவலும் ஆப்பிள் இதுவரை வெளியிடவில்லை. 2020க்கு தான் அந்த திட்டங்கள் என்று கூறியுள்ளது.

Advertisment
Advertisements

2020ம் ஆண்டில் வெளியாக இருக்கும் அனைத்து ஆப்பிள் போன்களும் ஓ.எல்.ஈ.டி. திரையுடன் தான் வெளியாகும் என்று முன்பே மிங்-சி-கௌ அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : பப்ஜி விளையாட ஒரு ஸ்மார்ட்போன் ! இந்தியாவில் வெளியாக இருக்கும் ப்ளாக் ஷார்க் கேமிங் போன்…

Samsung Apple

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: