5.42-inch OLED Apple iPhone : ஆப்பிள் 6, ஆப்பிள் 7, ஆப்பிள் 8 என்று ஒவ்வொரு வருடமும் புது அப்டேட்டுகளுடன் புதிய போன்கள் வெளியாக ஆப்பிள் ஐபோனின் தரம், விலை உயர்ந்ததோடு, அதன் அளவும், வடிவமும் மாறிக் கொண்டே சென்றது. கடந்த ஆண்டு வெளியான ஆப்பிள் x - சீரியஸ்களில் ஒரு குட்டி ஆப்பிள் வேரியண்ட் கூட இல்லாமல் எல்லாமே 6 இன்சிற்கு மேலாக இருந்தது அனைவருக்கும் கொஞ்சம் வருத்தம் தான்.
2017ல் 5.8 இன்ச் தான் மேக்ஸிமம் சைஸ் என்றிருந்த நிலையில் 2018ல் வெளியான ஐபோன்களில் மிகவும் குட்டியான போனாக வலம் வந்தது 5.8 இன்ச் அளவு கொண்ட iPhone XS.
5.42-inch OLED Apple iPhone
இனி அந்த பழைய க்யூட்டான ஆப்பிள் போன்களை பார்க்கவே மாட்டோம் என்று வருந்திக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு சந்தோஷமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். ஆனால் இனி 4 இன்ச் போன் என்றுமே திரும்ப வராது. மாறாக 5.4 இன்ச் போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது ஐபோன்.
ஐபோன்கள் எல்.சி.டி திரைகளில் தான் வெளியாகிக் கொண்டிருந்தன. அதற்கு மாற்றாக இந்த வருடம் வெளியாக இருக்கும் மூன்று போன்களில் இரண்டு போன்கள் ஓ.எல்.ஈ.டி திரையிலும் ஒரு போன் எல்.சி.டி (ஐபோன் எக்ஸ்ஆர்) திரையிலும் வெளி வரும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தது ஆப்பிள் நிறுவனம். இந்த போன்கள் வருகின்ற செப்டம்பரில் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடம் வெளியாக இருக்கும் அனைத்து போன்களும் ஓ.எல்.ஈ.டி திரையில் வெளியாக இருப்பதால், iPhone XR-போன்களின் நெக்ஸ்ட் வெர்ஷன் போன்கள் தான் ஆப்பிளில் இருந்து வெளியாகும் கடைசி எல்.சி.டி திரை கொண்ட போன்களாக இருக்கும்.
அடுத்த வருடம் வெளியாக இருக்கும் போன்கள் அளவு முறையே 5.42-inches, 6.06-inches and 6.67-inches என்று டிஜிடைம்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சாம்சங் டிஸ்பிளே நிறுவனம் தான் இந்த மூன்று போன்களுக்குமான ஓ.எல்.ஈ.டி திரையினை தயாரித்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கத்து.
மேலும் படிக்க : 15000 ரூபாய் பட்ஜெட்டிற்குள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா ?