குறைந்த பட்ஜெட்டுக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் என்னென்ன ? பட்டியல் தயார் !

48 எம்பி சோனி IMX586 sensor முதன்மை கேமரா மற்றும் 5 எம்.பி. இரண்டாம் கேமரா என இரண்டு பின்பக்க கேமராக்களையும் கொண்டுள்ளது.

Best smartphones under Rs 15,000
Best smartphones under Rs 15,000

Best smartphones under Rs 15,000 : 15 ஆயிரம் ரூபாய் போதும், ஒரு நல்ல ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு. அதிக எடை இல்லாத, ஸ்லிம் அண்ட் ஸ்லீக் வடிவத்தில், 48 எம்.பி. கேமராக்கள் கொண்ட போன்களையும் கூட 15 ஆயிரம் ரூபாயில் வாங்கி விடலாம்.

Best smartphones under Rs 15,000: Redmi Note 7 Pro

ரெட்மி நோட் 7 ப்ரோ… இந்திய வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்திய பெருமை எல்லாம் ரெட்மியை தான் சாரும்.  யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆனால் அனைத்து சிறப்பம்சங்களையும் கொண்ட புதிய போன்களை வெளியிட்டு அனைவரையும் அசத்திவிடும்.

ரெட்மி நோட் 5 ப்ரோவிற்கு அடிமையாகாத வாடிக்கையாளர்களே இல்லை எனலாம். ரெட்மி நோட் 6 மக்கள் மத்தியில் அவ்வளவு பிரபலம் ஆகாத நிலையில், குறுகிய கால இடைவெளியிலேயே புதிய நோட் சீரியஸ் போனை வெளியிட்டது சியோமி.

Redmi Note 7 Pro specifications and Price

6.3 இன்ச் ஃபுல் எச்.டி திரை + வாட்டர் ட்ராப் நோட்ச் ஸ்டைல் டிஸ்பிளேவுடன் வெளியாகியுள்ளது.

ஸ்நாப்ட்ராகன் 675 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ள்ளது

4000mAh பேட்டரி சேமிப்புத் திறன் கொண்டுள்ளது

48 எம்பி சோனி IMX586 sensor முதன்மை கேமரா மற்றும் 5 எம்.பி. இரண்டாம் கேமரா என இரண்டு பின்பக்க கேமராக்களையும் கொண்டுள்ளது.

விலை :ரூ.13,999

Best smartphones under Rs 15,000: Moto G7 Power

ஜி சீரியஸ் போன்கள் என்றாலே மிகவும் ஸ்டைலான, அதே சமயத்தில் மிகவும் சிறப்பாக வேலை செய்யும் போன்களாகவே இன்றும் கருதப்படுகிறது. மோட்டோ ஜி7 விலை நமக்கு கட்டுபடியாகது. ஆனால் அதை விட 3000 ரூபாய் குறைவில் கிடைக்கும் இந்த போன் ஜி7க்கே போட்டியாக அமைகிறது.

Moto G7 Power Price and Specifications

6.2 இன்ச் எச்.டி திரை கொண்டுள்ளது

ஸ்நாப்ட்ராகன் 632 ப்ரோசசர் பயன்படுத்தப்பட்டுள்ளாது

4ஜிபி ரேம்/64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது

ஒற்றை பின்பக்க கேமரா 12 எம்.பி கொண்டுள்ளது

ஆனால் இதில் இருக்கும் மற்றொரு ப்ளஸ் இதன் பேட்டரி திறன் 5000mAh

விலை : ரூ. 13999 ஆகும்

Best smartphones under Rs 15,000: Asus ZenFone Max Pro M2

மேக்ஸ் ப்ரோ எம்1 நல்ல முறையாக வாடிக்கையாளர்கள் கையில் சேர, அதன் தொடர்ச்சியாக மேக்ஸ் ப்ரோ எம்2 போனை அறிமுகப்படுத்தியது ஆசூஸ் நிறுவனம்.

கேமரா, டிஸ்பிளே, கோரில்லா க்ளாஸ் 6 ப்ரொடெக்சன் என சிறப்பாக முறையில் அனைத்து வகையிலும் இயங்கி வருகிறது மேக்ஸ் ப்ரோ எம்2.

ஆண்ட்ராய்ட் 8.1 ஓரியோவில் இயங்கும் இந்த போனின் பேட்டரி திறன் 5000mAh ஆகும்

3ஜிபி, 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் வேரியண்ட்டுகளிலும் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி இண்டெர்நெல் ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளிலும் வெளியாகிறது இந்த போன்.

இந்த போனின் பேசிக் வெர்ஷனின் விலை ரூ.9999ல் ஆரம்பமாகிறது.

மேலும் படிக்க : 5ஜி வேகத்தில் இயங்கும் புதிய போனை வெளியிட்டு அசத்தும் சாம்சங்

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Best smartphones under rs 15000 redmi note 7 pro moto g7 power asus zenfone max pro m2

Next Story
ஒரு முறை சார்ஜ் செய்தால், 4 நாட்களுக்கு தாக்குபிடிக்கும்… “ஷார்ப் x1 ஆன்ட்ராய்டு ஒன்” ஸ்மார்ட்போன்!sharp
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com