Advertisment

Google Maps tricks : ட்ராபிக் அதிகம் இருக்கும் சாலைகளிலும் பார்க்கிங் இனி மிக எளிது!

பயணம் செய்து கொண்டிருக்கும் போது உங்களின் போனில் சிக்னல் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Google Maps Tips Tricks, 5 Google Maps tricks

Google Maps Tips Tricks

5 Google Maps tricks you need to know :  கூகுள் மேப்பில் இருக்கும் சில பொதுவான ஆப்சன்களை நாம் எக்ஸ்ப்ளோர் செய்வதே இல்லை. இதில் இப்படி ஒரு ஆப்சன் இருக்கிறதா என்பதே இங்கு பலருக்கும் தெரிவது கிடையாது. இந்த ஆப்சன்களை நீங்கள் பயன்படுத்தினால் நிச்சயமாக உங்களுக்கு அடுத்த பயணம் மிகவும் சிறப்பு மிக்கதாக அமையும்.

Advertisment

Go off the grid with Incognito Mode

இன்காங்னிட்டோ மோடுக்கு போனால் நீங்கள் தை குறித்து தேடினீர்கள் என்பதே பலராலும் கண்டுபிடிக்க முடியாது. கூகுள் மேப்பினை ஆன் செய்யுங்கள். அதில் உங்களின் ப்ரொஃபைல் ஐகானை க்ளிக் செய்து இன்காங்னிட்டோ மோடுக்கு செல்லவும். அங்கு நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என்பதை சர்ச் செய்து கொண்டு அங்கே நீங்கள் பயணிக்கலாம்.

Use Maps offline

பயணம் செய்து கொண்டிருக்கும் போது உங்களின் போனில் சிக்னல் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. அதனால் தான் ஆஃப்லைன் வாய்ப்புகளை வழங்கியுள்ளது கூகுள். கூகுள் மேப்பில் நீங்கள் சென்று உங்களின் டெஸ்ட்டினேசனை பதிவு செய்யுங்கள். ஸ்கீரினின் பாட்டம் பகுதியில், இடத்தின் பெயரை டேப் செய்யுங்கள். அப்போது மூன்று டாட் மெனுக்கள் உருவாகும். அதில் டவுன்லோட் ஆஃப்லைன் மேப் என்ற ஆப்சனை தேர்வு செய்து மேப்பை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

you can plan your entire trip

உங்களுடைய மொத்த ட்ரிப் ப்ளானையும் கூகுள் மேப் உதவியுடன் வெற்றி கரமாக செய்யுங்கள். முதலில் நீங்கள் உங்களுடைய டெஸ்டினேசனை தேர்வு செய்யுங்ஜள். பிறகு ரூட்களை கண்டு பிடியுங்கள். பின்பு 3 டாட் மெனுக்கள் வலது கைது பக்கம் தோன்றும். அதில் ஆட் ஸ்டாப் மூலமாக எத்தனை ஸ்டாப்களில் நிற்க வேண்டும் என்பதை தேர்வு செய்து பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

Easily find an area to park your car in

உங்களுடைய காரை பார்க் செய்ய வசதியான இடங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் காரில் எங்காவது பயணம் செல்கின்றீர்கள் அங்கு கார் பார்க்கிங் வசதி இல்லாமல் இருந்தால் என்ன செய்வது? அதற்கும் உதவுகிறது கூகுள் மேப்.  Google Maps app -> Directions -> P icon (எஸ்டிமேட்டட் டைமுக்கு அருகே) -> நீல நிறத்தில் உங்களுக்கான ரூட் கிடைத்தால் பார்க்கிங்கிற்கு வசதிகள் இருக்கிறது என்று அர்த்தம். ஒரு வேலை சிவப்பு நிறத்தில் ரூட் இருந்தால் பார்க்கிங் செய்வது சற்று சிரமமான காரியம் தான்.

மேலும் படிக்க : கூகுள் மேப்பில் இத்தனை விசயம் இருக்குதா?

See what a place looks like before you go

நீங்கள் ஒரு இடத்திற்கு செல்கிறீர்கள் என்றால் அந்த இடம் குறித்து முழுமையான தகவல்களையும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். அதற்கு உங்களுக்கு அதிக அளவில் உதவி செய்யும் கூகுள் மேப். ஒரு ஹோட்டலில் நீங்கள் தங்க விரும்பினால் அந்த ஹோட்டல் இருக்கும் தெரு எப்படி இருக்கிறது என்பது முதற்கொண்டு உங்களுக்கு கூகுள் தெளிவான வரைபடத்தை அளித்து உதவும்.

Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment