5 useful android apps you should know : ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன்கள் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையே கொண்டு வந்தவை என்றால் அது நிதர்சனமான உண்மை தான். நம் வாழ்க்கையில் இருந்த சில முக்கியமான அம்சங்களை எல்லாம் ஒரு திரையில் காணும் வாய்ப்பினை நமக்கு அளித்தது இந்த கூகுளும் ஆண்ராய்ட் ஸ்மார்ட்போன்களும் தான். இந்த ஸ்மார்ட்போன்களில் நிறைய ஆப்கள் நம் தேவைக்கு ஏற்ப டவுன்லோண்ட் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அப்படி மிக முக்கியமான ஐந்து ஆப்களை பற்றி நாம் இங்கே தெரிந்து கொள்வோம்.
நீங்கள் ஒரு நாளில் எவ்வளவு நேரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த ஆப் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதன் மூலம் நீங்கள் உங்களின் நாளை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதில் நீங்கள் எவ்வளவு திட்டங்களை சிறப்பாக, நேர விரையம் ஏதுமின்றி செய்து முடித்தீர்கள் என்பதையும் அறிந்து கொள்ள இது வழி வகை செய்யும்.
இந்த செயலி ஒரு நிறுவனம் அல்லது கடையின் வரவு செலவு கணக்குகளை சிறப்பாக திட்டமிட உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஷாப் ஓனர்கள் மட்டுமின்றி அந்த ஷாப்பிற்கு வரும் வாடிக்கையாளர்களும் தங்கள் கடை வரவு செலவு கணக்கினை கணித்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : வெளி நாடுகளுக்கு செல்ல மொழி தான் பிரச்சனையா? உங்களுக்காக கூகுள் அசிஸ்டெண்ட் பேசும்
பள்ளி செல்லும் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி இர்துவாகும். 1 மில்லியனுக்கும் மேற்பட்ட லைவ் க்ளாஸ்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது. இந்த ஆப் 30 நாடுகளில் செயல்படுகிறது. சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.சி. மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த இது உதவுகிறது.
இந்த செயலி மூலமாக நீங்கள் உங்களின் மெமரி பவரை அதிகரிக்கலாம். மெமரி, லாஜிக், கணக்கு மற்றும் அக்யூரசி லெவலில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள இந்த ஆப் உங்களுக்கு அதிக அளவில் உதவியாக இருக்கும்.
உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் தேவையான ஆப்பாக இது நிச்சயம் இருக்கும். இது ஜிம்மில் வேலை பார்க்கும் ட்ரெய்னர்களுக்கும், ஃபிட்னெஸ் ட்ரெய்னர்களுக்கும் உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் ஜிம் ப்ளான் குறித்த முழுமையான திட்டங்களையும் மேற்பார்வை செய்து கொள்ளலாம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook
Web Title:5 useful android apps you should know boosted okcredit
வன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி
இப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்
ஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க!
வன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்