Advertisment

Samsung Galaxy A90 5G : மிட்ரேஞ்ச் போனில் 5ஜி தொழில்நுட்பம்... அசத்தும் சாம்சங்

Samsung Galaxy A90 5G launch : தென் கொரியாவில் வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5G mid-range smartphone Samsung Galaxy A90 5G Specifications

5G mid-range smartphone Samsung Galaxy A90 5G Specifications

5G mid-range smartphone Samsung Galaxy A90 5G Specifications :  5ஜி தொழில் நுட்பத்தில் இயங்கும் முதல் மிட்ரேஞ்ச் போனை அறிமுகம் செய்து வைக்க உள்ளது சாம்சங் நிறுவனம். சாம்சங் கேலக்ஸி ஏ90 என்ற மிட்ரேஞ்ச் பட்ஜெட் ஸ்மார்ட்போன் தற்போது 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்த ஸ்மார்ட்போன் சீன ஸ்மார்ட்போன் சந்தையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ஓப்போ மற்றும் சியோமி நிறுவனத்தின் வளர்ச்சியை பெரும் அளவில் கேள்விக்குட்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட்போனின் வருகை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : க்ளாரிட்டியான போட்டோக்களுக்காக உருவாக்கப்பட்ட 64 எம்.பி. கேமரா போன்

5G mid-range smartphone Samsung Galaxy A90 5G Specifications

இந்த ஸ்மார்ட்போன் 855 ப்ரோசசரை பெற்றுள்ளது

இதன் பேட்டரி 4500mAh சேமிப்புத் திறனை கொண்டுள்ளது

6.7 இன்ச் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரையை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்

யூ-டைப் டிஸ்பிளேவுடன் வாட்டர் ட்ராப் ஸ்டைல் நோட்ச் வடிவமைப்பில் வெளியாகிறது இந்த ஸ்மார்ட்போன்

இதன் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இந்த ஸ்மார்ட்போனின் திரையில் பொருத்தப்பட்டுள்ளது.

மூன்று பின்பக்க கேமராக்களை கொண்டிருக்கும் இந்த போனின் முதன்மை கேமரா செயல்திறன் 48 எம்.பி ஆகும். 5 எம்.பி டெப்த் சென்சார் மற்றும் 8 எம்.பி. அல்ட்ரா-வைட் லென்ஸை கொண்டுள்ளது.

செல்ஃபி கேமரா 32 எம்.பி. செயல்திறனை கொண்டுள்ளது.

தென் கொரியாவில் வருகின்ற செப்டம்பர் 4ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது. உலகளாவிய விற்பனை மிக விரைவில் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Samsung
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment