Advertisment

Aarogya Setu ஆப் - இந்த கையில் ஐடியா; அந்த கையில் ரூ4 லட்சம்

Aarogya Setu ஆப்பை ஆய்வர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் (மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவரும்) தங்கள் முழு விருப்பப்படி தணிக்கை செய்யலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Aarogya Setu, Aarogya Setu app, aarogya setu, aarogya setu app, aarogya setu open source, open source, android, ios, government of india, kaios, ஆரோக்கிய சேது ஆப், jiophone, github, aarogya setu source code, privacy, cybersecurity

Aarogya Setu, Aarogya Setu app, aarogya setu, aarogya setu app, aarogya setu open source, open source, android, ios, government of india, kaios, ஆரோக்கிய சேது ஆப், jiophone, github, aarogya setu source code, privacy, cybersecurity

Aarogya Setu ஆப்பை மேம்படுத்த உங்கள் யோசனைகளை தெரிவித்தால் அரசு உங்களுக்கு ரூபாய் 4 லட்சம் வரை வழங்கும்.

Advertisment

இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கோவிட்-19 தொடர்பு தடமறியும் ஆப்பான Aarogya Setu ஆப்பில் உள்ள bugs களை கண்டுபிடித்தாலோ அல்லது இந்த ஆப்பை இன்னும் சிறப்பாக மேம்படுத்த உங்கள் யோசனைகளை தெரிவித்தாலோ அதன் bug bounty திட்டத்தின் ஒரு பகுதியாக அரசு உங்களுக்கு ரூபாய் 4 லட்சம் வரை ரொக்க பணம் தரும். Aarogya Setu பயனர்கள், ஆய்வர்கள் உட்பட யார்வேண்டுமானாலும் ஜூன் 26, 2020 வரை இந்த bug bounty திட்டத்தின் கீழ் பங்குபெறலாம்.

வாட்ஸ் ஆப் பயனாளர்களே... உங்கள் தகவல்கள் திருடு போகும் வாய்ப்பு - கவனம்

Aarogya Setu ஆப்பின் தனியுரிமை மற்றும் தகவல் பாதுகாப்பில் உள்ள பாதிப்பு தாக்கம் குறித்த தகவல்களை ஆய்வர்கள் மற்றும் Aarogya Setu பயனர்கள் உட்பட அனைவரும் தர ஊக்குவிக்கப்படுகின்றனர், என அரசு இந்த திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் தெரிவித்துள்ளது.

Aarogya Setu ஆப்பை ஆய்வர்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் (மற்றும் தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவரும்) தங்கள் முழு விருப்பப்படி தணிக்கை செய்யலாம். ஏனென்றால் ஆண்ட்ராய்டுக்கான Aarogya Setu ஆப்பின் முழு source code ஐயும் இந்திய அரசாங்கம் GitHub பில் கொடுத்துள்ளது. மிக எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் Aarogya Setu ஆப்பை open source ஆக மாற்றியுள்ளது. மேலும் iOS மற்றும் KaiOS (ஜியோ கைபேசிக்கான) Source code மற்றும் server side விஷயங்கள் அனைவருக்கும் வரும் நாட்களில் கிடைக்கும்.

இதனுடன், அரசு ஒரு bug bounty திட்டத்தையும் அறிவித்துள்ளது அதன்படி பாதுகாப்பு ஆய்வாளர்கள் (security researchers) Aarogya Setu ஆப்பில் உள்ள பாதிப்புகளை "பொறுப்புடன்" வெளிப்படுத்த அனுமதிப்பதோடு அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதியையும் பெறலாம். பின்பற்ற சில வழிகாட்டுதல்களும் உள்ளன. முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட பாதிப்பு Aarogya Setu ஆப்பில் அல்லது source code அல்லது back-end server ல் மட்டும்தான் இருக்க வேண்டும். Operating system, cloud, web, server அல்லது database, அல்லது தொழில்நுட்பங்களான Bluetooth, GPS அல்லது SMS போன்ற தளங்களில் இருக்க கூடாது.

தனி நபர் இடைவெளி அலர்ட் ஆப் - கூகுளுக்கு கோடான கோடி நன்றி

Bug bounty திட்டத்தின் ஒரு பகுதியாக Aarogya Setu வின் source code மேம்பாடுகளைப் பகிர்ந்து கொள்ளவும் மக்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். “பரிந்துரைக்கப்பட்ட code மேம்பாடு ஆப்பின் ஒட்டுமொத்த செயல்திறன் மேம்பாடு, பேட்டரி பயன்பாடு குறைப்பு, நினைவகம் மற்றும் அலைவரிசை குறைப்பு (memory and bandwidth reduction) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்” என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Central Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment