Airtel 3 long-term prepaid recharge plans : ஒரு தடவை ரீசார்ஜ் செய்து ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கு தொல்லையில்லாம இருக்கனும்னு ஒவ்வொரு தடவையும் ரீசார்ஜ் செய்யும் போதும் மனசு சொல்லுது. ஏர்டெல்லுக்கு தான் நம்ம மனசோட ஆதங்கம் புரிஞ்சுருக்கும் போல. அதனால தான் மூன்று லாங்க் - டெர்ம் ப்ரீபெய்ட் ப்ளான்களை தங்களின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்துள்ளது.
Advertisment
Airtel Rs 597 prepaid recharge plan
இதன் வேலிடிட்டி அதிகம் என்ற காரணத்தாலோ என்னவோ டேட்டாவை முற்றிலுமாக குறைத்துவிட்டது ஏர்டெல் நிறுவனம். மொத்த வேலிடிட்டி காலத்திற்கும் 6ஜிபி டேட்டா மட்டுமே பயன்படும். அதிகமாக போன் - கால்கள் செய்பவர்களுக்கான ஆஃபர் இது. வேலிடிட்டி : 168 நாட்கள். 28 நாட்களுக்கு மட்டும் நீங்கள் 300 குறுஞ்செய்திகளை அனுப்பிக் கொள்ளலாம். ஆனால் கால்கள் அனைத்தும் அன் - லிமிட்டட் தான். ஒரு வருடத்திற்கான விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீர்ம் ப்ரீமியம் மற்றும் நார்டன் மொபைல் செக்யூரிட்டி போன்ற சிறப்பம்சங்களை ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
Airtel Rs 998 prepaid recharge plan
இந்த ரீசார்ஜ் ப்ளானும் மிக நீண்ட நாட்கள் வேலிடிட்டி கொண்டவை ஆகும். 336 நாட்கள் அதாவது 11 மாதங்கள் இதன் வேலிடிட்டி. நாள் ஒன்றுக்கு 300 மெசேஜ்கள் அனுப்பிக் கொள்ள்ள இயலும். இந்த வேலிடிட்டி பீரியடில் 12ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீர்ம் ப்ரீமியம் மற்றும் நார்டன் மொபைல் செக்யூரிட்டி போன்ற சிறப்பம்சங்களை ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
Airtel Rs 1699 prepaid recharge plan
ஒரு வருடம் வேலிடிட்டியை கொண்ட திட்டம் இதுவாகும். டேட்டா மற்றும் அன்லிமிட்டட் காலிங் என்று அசத்துகிறது இந்த பேக். நாள் ஒன்றுக்கு 1.4ஜிபி டேட்டா இலவசம். நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப இயலும். விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்டீர்ம் ப்ரீமியம் மற்றும் நார்டன் மொபைல் செக்யூரிட்டி போன்ற சிறப்பம்சங்களை ஒரு வருடத்திற்கு வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.