/tamil-ie/media/media_files/uploads/2017/10/airtel.jpg)
Airtel Best Selling Circle Specific Postpaid Plans, airtel rs 399 plan, airtel rs 349 plan : ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்டுகளை வழங்கியுள்ளது. கடந்த மாதம் வரை பயன்பாட்டில் இருந்த 499 ரூபாய்க்கான போஸ்ட்பெய்ட் ப்ளானை திரும்பப் பெற்றுள்ளது. அதற்கு பதிலாக ரூ.399-க்கான போஸ்ட்பெய்ட் ப்ளானை அறிமுகம் செய்துள்ளது.
அதே போன்று ரூ.349-க்கான ப்ளான்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது ஏர்டெல். இந்த இரண்டும் ஏர்டெலின் பெஸ்ட் செல்லிங் சர்கிள்ச் ஸ்பெசிபிக் ப்ளான்கள் என்று ஏர்டெல் அறிவித்துள்ளது.
ரூ. 349க்கான போஸ்ட்பெய்ட் ப்ளான்கள் ஆந்திரா, டெல்லி, கர்நாடகா, சென்னை மற்றும் தமிழகத்தின் அநேக பகுதிகளில் கிடைக்கின்றது. ரூ.399க்கான புதிய ப்ளான்கள் மேலே கூறிய பகுதிகளைத் தவிர அனைத்து பகுதிகளிலும் பயன்பாட்டிற்கு வருகிறது.
ரூ. 349 போஸ்ட்பெய்ட் ப்ளான்
40ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த ப்ளான்
அன்லிமிட்டட் லோக்கல் கால்கள், எஸ்.டி.டி கால்கள் மற்றும் ரோமிங் கால்கள் செய்து கொள்ளலாம்.
நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்கள் அனுப்ப இயலும்
ஏர்டெல் டிவி ப்ரிமியம் மற்றும் ஜீ5 போன்ற செயலிகளை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த ப்ளான்கள் முழுமையாக ஆந்திரா, சென்னை, இதர தமிழக பகுதிகள், தலைநகர் டெல்லி ஆகிய இடங்களில் மட்டுமே இந்த ப்ளானை வாடிக்கையாளர்கள் பெற்றிட இயலும்.
மேலும் படிக்க : உலகின் முதல் ”ரொட்டேட்டிங் கேமரா” ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி ஏ80!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.