சாம்சங் கேலக்ஸி ஏ80 : உலகின் முதல் ரொட்டேட்டிங் கேமராக்களை கொண்ட ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

வெள்ளை, கோல்ட், மற்றும் கறுப்பு நிறங்களில் இந்த போன் வெளியாகிறது

Samsung Galaxy A80 Specification, Price, Launch, Availability
Samsung Galaxy A80  Specification, Price, Launch, Availability

Samsung Galaxy A80 Specification, Price, Launch, Availability : ஸ்மார்ட்போன்களில் முதன்முறையாக நான்கு பின்பக்க கேமராக்களை பயன்படுத்தியது சாம்சங் நிறுவனம் தான். “உலகின் பல முதல்” என்று பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியதில் சாம்சங் நிறுவனத்தின் பங்கு மிகப்பெரியது.

தற்போது வெளியாக இருக்கும் சாம்சங் கேலக்ஸி ஏ80 ஸ்மார்ட்போனுக்கும் இப்படி ஒரு சிறப்பம்சம் உள்ளது. ஆம். உலகின் முதல் ரோட்டேட்டிங் கேமராவை கொண்டுள்ள ஸ்மார்ட்போன் இதுவே.  எப்போது இந்த ஸ்மார்ட்போன் வெளியாக உள்ளது என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், சாம்சங் இந்தியா இணையத்தில் நோட்டிஃபை மீ டேப் லைவ்வில் இருக்கிறது.

உலக சந்தையில் இந்த போன் ஏப்ரல் மாதமே வெளியாகிவிட்டது. இந்தியாவில் ஏ80 ஸ்மார்ட்போனிற்கான ப்ரிவியூக்கள் ஐந்து நகரங்களில் ஜூன் 8 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது. இதன் விலை ரூ.45 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung Galaxy A80 Specification

இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் ஒரு பார்வை.

6.7 இன்ச் சூப்பர் ஏ.எம்.ஓ.எல்.ஈ.டி திரை

1980 x 2400 பிக்சல் ரெசலியூசன்

மெட்டல் ஃப்ரேம்கள் மற்றும் 3டி க்ளாஸ் டிசைன் வடிவமைப்புடன் வெளியாகிறாது இந்த போன்.

நியூ இன்ஃபினிட்டி டிஸ்பிளே மற்றும் அல்ட்ராசோனிக் இன் டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆக்டா கோர் ஸ்நாப்ட்ராகன் 730ஜி ப்ரோசசர் பொருத்தப்பட்டுள்ளது

8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜ் கொண்டுள்ளது

பேட்டரி : 3700 mAh ஆகும்

48 எம்.பி. முதன்மை கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைட் செகண்ட்ரி கேமரா, மற்றும் 3டி டெப்த் கேமரா ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளது.

வெள்ளை, கோல்ட், மற்றும் கறுப்பு நிறங்களில் இந்த போன் வெளியாகிறது

மேலும் படிக்க : உலககோப்பை கிரிக்கெட் : வாடிக்கையாளர்களுக்காக சலுகைகளை அள்ளி வீசும் ஜியோ

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Samsung galaxy a80 specification price launch availability

Next Story
ஆப்பிள் ஐபோன் 8-ல் ஃபின்கர் ப்ரிண்ட் ஸ்கேனர் கிடையாதாம்! ஆய்வாளரின் கணிப்புiOS 11
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express