/tamil-ie/media/media_files/uploads/2017/12/a22.jpg)
Airtel Prepaid Data Plans
Airtel Prepaid Data Plans : ரூ. 100க்கு குறைவாக ப்ரீபெய்ட் ப்ளான்களை அள்ளி வழங்கும் ஏர்டெல் தற்போது ஏர்டெல் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள இரண்டு புதிய ப்ரீபெய்ட் ப்ளான்களை கொண்டு வந்துள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ளான்கள் அளிக்கும் சிறப்பம்சங்கள் என்னென்ன ?
Airtel Prepaid Data Plans
இந்த இரண்டு பேக்குகளும் டேட்டாவிற்காக கொண்டு வரப்பட்டவையாகும். 3ஜி மற்றும் 4ஜி ஸ்பீடில் 3ஜிபி டேட்டாவை பெற 48 ரூபாய்க்கான ப்ரிபெய்ட் ப்ளானை பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போன்று 98 ரூபாய்க்கான ப்ளானில் 6ஜிபி டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம். கூடுதலாக 10 சர்வதேச எஸ்.எம்.எஸ்களை அனுப்பிக் கொள்ளவும் உங்களால் இயலும்.
அதிக அளவு நெட் தேவையில்லை என்று உணர்பவர்களுக்காகவே இந்த டேட்டா பேக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதே போன்று வெறும் 520 எம்.பி. டேட்டாவை தரும் ரூ.29க்கான ப்ளானையும் அறிமுகம் செய்து வைத்துள்ளது ஏர்டெல். இதன் வேலிடிட்டியும் 28 நாட்கள் மட்டுமே.
ஒரு வாரத்திற்கான வீக்லி ப்ளானாக ரூ.92க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது ஏர்டெல். இதன் மூலம் 3ஜி மற்றும் 4ஜி வேகத்தில் 6ஜிபி டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.