Advertisment

டிக்-டாக்கிற்கு மாற்றாக வரும் புதுவரவுகள்! நிதானமாக களமாட நினைக்கும் ”ப்ராண்ட்கள்”

நல்ல கண்டெண்ட்டுகளுடன் இயங்கும் ஒரு டிக்டாக் பயனர் சாதாரணமாக ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பாதிக்க இயலும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Alternatives to Chinese video sharing apps see surge, but brands choose to wait and watch

Alternatives to Chinese video sharing apps see surge, but brands choose to wait and watch

 Aashish Aryan , Pranav Mukul

Advertisment

Alternatives to Chinese video-sharing apps see surge, but brands choose to wait and watch : டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. டிக்டாக்கிற்கு மாற்றாக சந்தையில் புதிய புதிய ஆப்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. டிக்டாக்கிற்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்படும் ஆப்களின் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியதால், டிக்டாக்கை வாழ்வாதாரமகாக கொண்டு இயங்கி வந்தவர்களும் இந்த புதிய செயலிகளுக்கு மாறியுள்ளனர்.

இன்மொபி க்ரூப் (InMobi Group)-ன் வீடியோ செயலியான ரொபோஸோவை 75 மில்லியன் மக்கள் ஒரு வாரத்தில் டவுன் லோடு செய்துள்ளனர். மற்றொரு செயலியான பாக்ஸ்என்கேஜின் (BoxEngage) தரவிறக்கமும், டிக்டாக் தடை செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் 10 முறை அதிகரித்துள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 1ம் தேதி அன்று ஜீ5 தன்னுடைய அதிகாரப்பூர்வ ஷார்ட் வீடியோ செயலியான ஹிப்பி (HiPi) அறிமுகம் குறித்து அறிவித்திருந்தது. சிங்கரி செயலியில் நாள் ஒன்றுக்கு 148 மில்லியன் வீடியோக்கள் பார்வையிடப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முகநூல் நிறுவனத்தின் செயலியான இன்ஸ்டகிராமின் ஒரு சேவையாக 15 நொடி வீடியோ (Reels) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

To read this article in English

பார்வைகளும், தரவிறக்கங்களும் அதிகமாக இருக்கின்ற போதிலும், இந்த செயலிகளில் தங்களை பின் தொடரும் ஃபாலோவர்களின் எண்ணிக்கையை, வருமானத்திற்கு மாற்ற இயலாது. அதனால் தான் விளம்பரதாரர்களும், ப்ராண்ட்களும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஆண்டில், டிக்டாக்கிற்கு விளம்பரம் மூலமாக வரும் வருமானம் மட்டும் சுமார் 50% உயர்ந்திருக்கிறது. இருப்பினும், நாட்டின் ரூ .17,000 கோடி டிஜிட்டல் விளம்பர சந்தையில் டிக்டாக் இன்னும் குறிப்பிடத்தக்க பங்கை எடுக்கவில்லை. இன்று வரை கூகுள் மற்றும் ஃபேஸ்புக் மட்டுமே டிஜிட்டல் விளம்பர சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது”என்று டிஜிட்டல் மீடியா நிறுவனமான எவோல்வ் டிஜிடாஸின் நிர்வாக இயக்குனர் அபர்ணா குப்தா கூறுகிறார்.

மேலும் படிக்க : டிக்டாக்கிற்கு மாற்று ஏது? இந்திய பயனர்களை திருப்திப்படுத்தும் வகையில் புதிய செயலிகள் இருக்குமா?

டிக்டாக், ஹெலோ, மற்றும் இதர ஷார்ட் வீடியோ தளங்கள் சந்தைதாரர்களுக்கு பெரும் மகிழ்ச்சையை தருவதாக இருந்தது, மிகவும் குறைவான பட்ஜெட்டிலும் கூட அனைத்து தரப்பினரையும் சென்று சேரும் வகையில் அவை இருந்தன. ஹோம் ஸ்க்ரீன் ஆட், ஹேஷ்டேக் ப்ரமோசன்கள், மற்றும் இன்ஃப்ளூயென்சர் அவுட்ரீச் என்று எங்களிடம் பல்வேறு சலுகை தேர்வுகள் இருந்தன. அவற்றின் விலை நிர்ணயம் ரூ. 5 முதல் 10 லட்சம் வரையில் இருந்தது.

இந்த செயலிகள் உலகளாவிய நிறுவனங்களையும் கவர்ந்திழுத்தது. பெப்சிக்கோ மற்றும் ரெகிட் பென்க்சிஸர், மற்றும் ஹோம்க்ரௌன் போன்றவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. பாண்ட்டலூன்ஸ் மற்றும் ஓயோ போன்ற உள்ளூர் ப்ராண்டுகளின் நன்மதிப்பையும் இவை பெற்றிருந்தது. இந்த செயலிகளில் செய்யப்பட்ட வீடியோ காம்பைன்ஸ் மூலமாக டெட்டால் விளம்பரம் பில்லியன் பார்வைகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

வளர்ந்து வரும் டாக்ஸி நிறுவனத்தின் தலைவர் இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசும் போது “டிக்டாக் காம்பைன்ஸ் மூலமாக ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்களில் வர்த்தகத்தை துவங்க முடிவு செய்திருந்தோம்” என்று கூறியுள்ளார். டிக்டாக் பிரபலங்கள் பலரும் சிறுநகரங்களில் இருக்கும் மத்தியிலும் ரீச் ஆகியுள்ளனர். மேலும் சினிமா பிரபலங்களைக் காட்டிலும் அவர்கள் குறைவான அளவிலேயே சம்பளம் வாங்குகிறார்கள். டிக்டாக் பிரபலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியானது இன்ஸ்டகிராம் பிரபலங்களுக்கு தரும் தொகையைக் காட்டிலும் 10 மடங்கு குறைவு. அதே சமயத்தில் அவர்களால் எளிதில் இலக்கை அடைந்துவிட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க : டிக்டாக் செயலிக்கு ஈடாகுமா இன்ஸ்டாவின் ”ரீல்ஸ்”?

டிஜிட்டல் மீடியா எக்ஸ்க்யூடிவாக இருக்கும் கௌரவ் ஜெயின் என்பவர் ஜூன் மாதம் 29 ஆம் தேதி அன்று `1 மில்லியன் ஃபாலோவர் என்ற மைல்ஸ்டோனை டிக்டாக்கில் எட்டினார். ஆனால் அவர் மகிழ்ச்சிக்கான ஆயுட்காலம் மிகவும் குறைவுதான். அன்றைய நாள் இரவில் டிக்டாக் உட்பட 59 செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது. இது குறித்து அவர் கூறும் போது “டிக்டாக் தான் நாளைய எதிர்காலம். பணம் சம்பாதிக்க நிறைய வழிகளை அது உருவாக்கித் தர கூடும், நல்ல கண்டெண்ட்டுகளுடன் இயங்கும் ஒரு டிக்டாக் பயனர் சாதாரணமாக ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பாதிக்க இயலும்.

ஜெயன் மட்டும் அல்ல. அவரைப் போன்று நிறைய இந்தியர்கள் டிக்டாக் மூலம் நல்ல வருமானம் ஈட்டினார்கள். இந்தியாவில் அதிக ஃபாலோவர்களை கொண்ட டிக்டாக் பயனாளர் 16 வயதான மும்பையை சேர்ந்த ரியாஸ் அலி என்பவர் தான். 43 மில்லியன் ஃபாலோவர்களை அவர் பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்த ஊடக திட்டமிடல் என்பது நகர்புறங்களில் வசிக்கும், ஆங்கிலம் தெரிந்த ஆண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது. ஆனால் டிக்டாக் மற்றொரு வகையில் மக்களிடையே பிரபலம் அடைந்தது. இணைய பயன்பாடு என்பது அனைத்து மொழி பேசும் மக்களிடமும் உள்ளது. ஒருவர் இணையத்தை பயன்படுத்த வேண்டும் என்றால் அவருக்கு வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் டிக்டாக் போன்ற செயலிகள் தோன்ற ஆரம்பித்தது என்கிறார் போபாலை சேர்ந்த விளம்பரதாரர் ஒருவர்.

ஆனால் மற்ற விளம்பரதாரர்களின் திட்டமிடல் வேறாக இருக்கும். டிக்டாக்கின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். பாலிசி ரீதியாக எந்த பிரச்சனையும் இல்லை ஏன் என்றால் ப்ராண்ட்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுகின்றன. இந்த செயலிகளை பயன்படுத்தும் பயனர்கள் தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டியது இல்லை என்பதால் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது இந்த செயலிகள் என்று பெயர் கூற விரும்பாத மும்பையை சேர்ந்த மற்றொரு விளம்பரதாரர் கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Tiktok
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment